welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday, 24 December 2011

பதவி உயர்வுகள்.

                                                     பதவி உயர்வுகள்.
                               1. ஓர் இடைநிலை ஆசிரியர் ஓர் அலகின் (Unit) முன்னுரிமைப்பட்டியல் (Seniority) அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வைப் பெறுகின்றார்.
                              
                             2. ஓர் அலகிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய ஏற்ற முறையில் உள்ள ஆசிரியர்களின் கூட்டு முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலும் உயர்கல்வித் தகுதி அடிப்படையிலும் நடுநிலைப் பள்ளி பட்டநிலை ஆசிரியர் அல்லது தமிழாசிரியர் பதவியுயர்வு வழங்கப்படுகிறது.

                            3. ஓர் அலகின் கல்வியியல் பட்டத்தேர்ச்சி (B.Ed Degree) பெற்றுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / நடுநிலைப்பள்ளி பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் ஆகிய முவ்வகையினரின் ஊட்டுபதவி (Feeder Cadre) ஏற்ற நாளின் அடிப்படையிலான கூட்டு முன்னுரைப் பட்டியலின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வகையினரிடையே உள்ள அடிப்படை ஊதிய வேறுபாட்டை பொருட்படுத்தாமல் இப்பதவி உயர்வு வழங்கப்படும். அரசாணை நிலை எண் 166 ப.க.து. எண். 2 நாள்7.6.99

                             4. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டநிலை தலைமையாசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு மாற்றத்தக்கப் பணியாக (Inter Changeable) வழங்கப்பெறுகிறது. இதற்கு துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
                            5. வெளி ஒன்றியத்துக்கோ , நகராட்சிக்கோ மாற்றலில் செல்லும் இடைநிலை ஆசிரியர், தகுதிகாண்பருவம் முடித்தவராயின் புதிய மேலாண்மை அழகின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தகுதிகாண்பருவம் முடித்தவர்களுக்கு இறுதியில் சேர்க்கப் பெற்று பதவி உயர்வு பெறுவார்.

                           6. தமிழாசிரியர் பதவியில் உள்ளவர் கல்வியியல் இளையவர் (B.Ed.) பட்டம் பெற்றிடாவிடினும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியுயர்வுக்கு தகுதியுடையவராவார். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/2000 நாள் 13.6.2000 )
                               7. ஓர் இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் பதவியுயர்வில் எதையேனும் விட்டுக் கொடுத்து விடுவதனால் மற்ற பதவியுயர்வை பெரும் தகுதியை இழந்தவர் ஆகார். அவருக்கு மற்ற பதவியுயர்வு முன்னுரிமைப்படி வழங்கப்பெறல் வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/ நாள் 23.12.1999)

                         8.Double Major, Trible Major பட்டம்பெற்றவர்களில் ,அவர்கள் பி.எட். பட்டம் பெற்றிருந்தால் , அவர்கள் படித்த முக்கிய பாடங்களின்படியும் உரிய முன்னுரிமையின்படியும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்த்தல் வேண்டும். பி.எட். வுடன் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர் கூடுதலாக மற்றொரு பாடத்தில் ஒரு ஆண்டு படிப்பு முடித்து பட்டம் பெற்றிருந்தால் அந்தப் பாடத்திற்கும் அவரை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 36679 /D3/2008 நாள் 18.11.2008)

ஊக்க ஊதிய உயர்வுகள்.

                                                 ஊக்க ஊதிய உயர்வுகள்.
                                        1.ஓர் இடைநிலையாசிரியர் B.Ed பட்டம் பெற்றால் அத்தகுதிக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் M.A., M.Sc., M.Ed., போன்ற முதுகலை பட்டங்களில் ஒன்றைப் பெற்றால் அத்தகுதிக்காக மேலும் ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.

                                         2. இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் B.Ed பட்டம் பெறாமல் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் B.Ed பட்டம் பெற்றால் ஒரே நிகழ்வில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் ( நான்கு ஊதிய உயர்வுத் தொகைகள்)அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.

                                          3. இவ்வூதிய உயர்வுகள் உரிய தேர்வுகள் எழுதி முடித்த நாளுக்கு மறுநாள் முதல் வழங்கப்படுகின்றன.

                                          4. அண்ணாமலை பல்கலைகழகத்தின் திறந்த நிலைப் பல்கலைகழகத் திட்டத்தில் (Open University System) வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் அப்பல்கலைகழகத்தின் முறையான திட்டத்தின் (Regular Stream) வழங்கப்பெறும் பட்டங்களுக்கு சமமானவையாகக் கருதி பொதுப் பணிகளில் வேலை வாய்ப்புக்கு அரசு ஏற்ப்பளிப்பு (Recognition) செய்துள்ளது. அரசு மடல் 1630/R/97-1 (சீரமைப்பு) நாள் 20.2.97 மற்றும் அரசாணை எண்.216 /நிலை/ ப.ம.சீ.துறை/நாள் 26.8.97

1 முதல் 6​ம் வகுப்பு வரை ஒரே ஒரு பாடப்புத்தகம் அரசானை வெளியீடு

மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்​ அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வி செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:​ ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கீடும்போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன. 1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள் ஒருங்கிணைக்கப்படும். 7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தை தொகுதி 1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலை தொகுதி​2 எனவும் ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்கள் வெளியிடப்படும். தமிழ்வழி, ஆங்கில வழி ஆகிய 2 வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாடநூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாக பிரிக்கப்படாமல் வருடத்துக்கு ஒரு புத்தகமாக, இப்போது நடை முறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும். 9, 10 வகுப்புகளுக்கு முப் பருவமுறை 2012​13​ல் நடை முறைப் படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையை பின்பற்றி பாடநூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அரசானை கூறுகிறது.

Wednesday, 21 December 2011

இடைநிலை ஆசிரியர் நியமனம் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 1000 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முருகன் உள்பட 5க்கும் அதிகமானோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அதில், ‘‘மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் உத்தரவுபடி, இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கு தேசிய கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டும் நியமிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் ஏராளமானவர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை. எனவே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டும் ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.இந்த வழக்கை நீதிபதி சுகுணா விசாரித்தார். தமிழக அரசு சார்பில், சிறப்பு வக்கீல் சம்பத் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தகுதி தேர்வில் வெற்றி பெற மத்திய அரசு 5 ஆண்டு அவகாசம் அளித்துள்ளது. விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். எந்த தடையும் விதிக்க கூடாது என்றார்.இதைக் கேட்ட நீதிபதி புதிய நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது. அரசு ஒரு வாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Tuesday, 20 December 2011

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடக்கம் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:- மார்ச்-8-மொழித்தாள் ஒன்று. மார்ச்-9-மொழித்தாள் இரண்டு. மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள். மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள். மார்ச்-16- இயற்பியல்,பொருளியல்,உளவியல். மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல். மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல். மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து. மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம். மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி. மார்ச்-30- தொழில்கல்வி,தியரி அரசியல், மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங்,மற்றும் புள்ளியியல்.

Friday, 16 December 2011

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவு


Scholarship for Students

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.

நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் படி, "பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப் படும்; ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை, தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப் படும்,' என, அறிவித்து இருந்தார். மேலும், புதிய முறையில் மாணவர்களின் இதர திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

செயல் வடிவம் : 
இந்த அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில், கூறியிருப்பதாவது: 
சட்டசபையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் (2012-13) இருந்து, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என்று, பள்ளிக்கல்விக்கான மாநில பொது வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமல்படுத்துவதற்காக, இயக்குனர் அனுப்பியுள்ள பரிந்துரையை அரசு பரிசீலனை செய்து, வாரியத்தின் முடிவை அமல்படுத்த அரசு உத்தரவிடுகிறது.

முப்பருவ முறையால், வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் கற்பதற்கான நேரம் கிடைக்கும். புத்தகங்களில் படிப்பதை, செயல்பூர்வமாக, நேரடியாக சம்பந்தபட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும் திட்டம், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். மனப்பாடத்திற்கு அப்பாற்பட்டு, கல்வி சார்ந்த புரிதல்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள் கலந்துரையாடல் செய்வதற்காக, போதிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் செயல் திறன்களின் வளர்ச்சி, அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும்.ஒரு பருவத்திற்கான சிறிய பகுதிகளை மட்டும் ஆசிரியர்கள், பொறுமையாக கற்பிக்கலாம். ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒருங்கிணைந்து, நண்பர்கள் போன்று வகுப்பறைகளில் செயல்படவும் வகுக்கும்.முப்பருவ கல்வி திட்டம் மற்றும் தொடர் மதிப்பீட்டு தேர்வு முறை, 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 
இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

முப்பருவ முறை:
* முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
* இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
* மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை
.

Wednesday, 14 December 2011

THREE TERM METHOD

I Term June, July, August and September
II Term October, November and December
III Term January, February, March and April.

School Education Department

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளிகள் - அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 203
Dt : December 9, 2011
 School Education – Announcement made by the Hon’ble Chief Minister in the Tamil Nadu Legislative Assembly under rule 110 of TNLA on 26.8.2011 – Introduction of Trimester Pattern in all Schools in Tamil Nadu from the academic year 2012-13 for classes I to VIII – orders issued.

Friday, 9 December 2011

கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஆணை வழங்கும் அரசாணை

பள்ளிக்கல்வித்துறை

தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ((Rashtriya Madhyamik Shiksha Abhiyan) - 2011-2012ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

Wednesday, 7 December 2011

ரூ.412.65 கோடியில் 710 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த ஜெயலலிதா உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 710 நடுநிலைப்பள்ளிகள் 412.65 செலவில் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, மதிய உணவு வழங்குவது; கல்வியினை இடையே விட்டு செல்லாமல் இருப்பதற்காக உதவித் தொகை வழங்குவது; மிதிவண்டி வழங்குவது; மடிக்கணினி வழங்குவது; போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மாணவர்களின் நலனுக்காகவும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக அமையும் வண்ணம் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், 710 ஊராட்சி ஒன்றிய,மாநகராட்சி,நகராட்சி,நலத்துறை நடுநிலைப்பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி, நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தவும், அப்பள்ளிகள் 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்டு 2011-12 ஆம் ஆண்டிலேயே முழுமையாக செயல்படவும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 710 அரசு, மாநகராட்சி, நகராட்சி, நலத்துறை உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் செலவு ஏற்படும்.

இவ்வாறு தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதியதாக வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ 58.12 லட்சம்

வீதம் 710 பள்ளிகளுக்கு 412 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று 2009-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 1,581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 75 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதேபோன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 58 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவாகும்.

மேற்கூறிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை தோற்றுவிப்பதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தமாக 134 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவாகும். மேலும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி, 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 2011-12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடங்கள் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

சென்னை: வரும் மார்ச் மாதம் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்த எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் பாடமுறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, 2011-2012-ம் கல்வி ஆண்டுமுதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

எனவே, 2012 முதல் நடைபெற இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர் மற்றும் அனைத்து பாடங்களையும் முதன் முறையாக தேர்வு எழுத இருக்கும் தனித்தேர்வர்கள் மார்ச் 2012 பொதுத்தேர்விலிருந்து சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. தனி தேர்வர்கள் விண்ணப்பித்தல் குறித்த அறிவிக்கை தனியாக வெளியிடப்படும்.

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளில் பழைய பாடமுறை திட்டத்தில் தேர்வு எழுதி, ஒருசில பாடங்களில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு பழைய பாடத்திட்டத்தில் (நடைமுறையில் உள்ள பாடத்திட்டம்) மார்ச் 2012 மற்றும் செப்டம்பர், அக்டோபர் 2012 ஆகிய இரு பருவங்களில் (ஜூன், ஜூலை உடனடி தேர்வுகளை உள்ளடக்கி) தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இரு வாய்ப்புகளை பயன்படுத்தி பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத பாடங்களை தேர்வெழுதலாம் என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட திறந்தவெளிப்பள்ளியில் பயின்று தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதுவோருக்கும் இது பொருந்தும். இந்த இரு பருவ தேர்வுகளைத்தவிர, எக்காரணம் கொண்டும் மீண்டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.

சமச்சீர் கல்விக் குழு மாற்றியமைப்பு

சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தியுள்ளதை அடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பை, பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியமாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னை பல்கலை பேராசிரியர் தாண்டவன், தி.நகரை சேர்ந்த ஹரிஷ் மேத்தா, எழும்பூர் மாநில மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சூசன் எட்வர்ட் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, பள்ளிகள் தரப்பில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக, ஈரோடு மாவட்டம் ஸ்ரீ சரவண் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சவுமிளா, ஓரியண்டல் பள்ளிகள் சார்பாக, அம்பத்தூர் அன்னைகா ஓரியண்டல் அரபிக் மேல் நிலைப் பள்ளி செயலர் சாகிஸ் அகமது, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்பாக, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் காப்பாளர் டான் பாஸ்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, 6 December 2011

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக் கட்டணம்-ஜெ. கூடுதல் நிதி

சென்னை:  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

’’கற்றவர் கண்ணுடையர்; கல்லாதவர் புண்ணுடையர்; என்ற வள்ளுவனின் வாய் மொழிக்கேற்ப, அனைத்து குழந்தைகளையும், குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதி திராவிட இனத்தைச் சார்ந்த குழந்தைகளை கல்லாமை என்ற இழிவிலிருந்து காப்பாற்றும் வகையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கும் விடுதிகளை உருவாக்குதல்; சத்தான உணவு வழங்குதல், சில்லறை செலவினங்களுக்கான உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியருக்கான உணவுக் கட்டணம் 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாய் ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் 550/-ரூபாயிலிருந்து 750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் இவ்விடுதிகளில் தங்கி பயலும் 1,20,015 மாணவ-மாணவியர் பயன் பெறுவர்.

மேலும் இவ்விடுதிகளில் புதியதாக உருவாக்கப்பட உள்ள 1,500 கூடுதல் இருக்கைகளுக்கும் இந்த உணவு கட்டணங்கள் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாணவர் இல்லங்களில் தங்கி பயிலும் 5,438 மாணவ மாணவியருக்கும் உயர்த்தப்பட்ட உணவு கட்டணங்களை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதற்காக அரசுக்கு ஆண்டு தோறும் 25 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். தமிழ் நாட்டில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில், தற்போதைய உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையினை கருத்தில் கொண்டு அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவு கட்டணத்தை 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாயாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான உணவு கட்டணத்தை 550/- ரூபாயிலிருந்து 750/- ரூபாயாகவும் உயர்த்தி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 15 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கட்டணத்தை 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், 39 தனியார் விடுதிகளில் தங்கி படிக்கும் 1,948 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பு மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், ஆதி திராவிடர்/பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் மிகவும் பயன் பெறுவர். இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடையில் படிப்பினை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறையவும் வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DA OF CENTRAL GOVERNMENT EMPLOYEES

(a) whether Government has plans to increase dearness allowance effective from January,2011 for Central Government employees with a rate that commensurates with the inflationary trends and plights of working class in the past few months;
 
(b) if so, the details thereof and if not, the reasons therefore;
(c) whether Government has any proposals to declare DA as Dearness Pay when it will cross 50 per cent, as it was done during the 5th Pay Commission;
 
(d) if so, the details thereof; and
(e) if not the reasons therefore?
ANSWER
 
MINISTER OF THE STATE IN THE MINISTRY OF FINANCE (SHRI NAMO NARIAN MEENA)
(a)&fb): Increase in Dearness Allowance payable to Central Government employees with effect from January, 2011 will be worked out on basis of accepted formula which is based on the recommendation of 6th Central Pay Commission.
 
(ch(d) &(e): No proposal to declare DA as dearness pay, after DA crosses 50% is under consideration of the Government. The Sixth Pay Commission did not recommend merger of dearness allowance with Basic Pay at any stage. Government accepted this recommendation vide Government of India Resolution dated 29.8.2008

சமச்சீர் கல்விக் குழு மாற்றியமைப்பு

சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தியுள்ளதை அடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பை, பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியமாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னை பல்கலை பேராசிரியர் தாண்டவன், தி.நகரை சேர்ந்த ஹரிஷ் மேத்தா, எழும்பூர் மாநில மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சூசன் எட்வர்ட் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, பள்ளிகள் தரப்பில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக, ஈரோடு மாவட்டம் ஸ்ரீ சரவண் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சவுமிளா, ஓரியண்டல் பள்ளிகள் சார்பாக, அம்பத்தூர் அன்னைகா ஓரியண்டல் அரபிக் மேல் நிலைப் பள்ளி செயலர் சாகிஸ் அகமது, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்பாக, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் காப்பாளர் டான் பாஸ்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்

 
ஆசிரியர் பயிற்றுனர்கள் தினமும் காலை 8.40 மணி முதல் 9 மணிக்குள் அந்தந்த வட்டார வள மைய த்தில் ஆஜராகி, வருகையை கட்டாயம் பதிவு செய்த பின்னரே பள்ளி பார்வையிடலுக்குச் செல்ல வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.பள்ளி பார்வைக்குச் செல்லும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் பணியில் இல்லாதபட்சத்தில், அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  இந்த நடைமுறை டிசம்பர் 1 (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்வதென்றால், முதல் நாளே ‘மூவ்மென்ட் ரிஜிஸ்டரில்’ பதிவு செய்துவிட் டுச் செல்ல தடையி ல்லை,’’

பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் :
குறைந்தபட்சம் வாரத்திற்கு 9   மணி நேரம் பணியாற்றவேண்டும் .

ஒரு பள்ளியில் வாரத்திற்கு   மூன்று அரை வேலை  நாட்கள் பணியாற்றவேண்டும்
9.30 -12.30 அ 2.00-5.00

.பள்ளி வேலைநேரத்திற்கு பிறகும் தலைமை ஆசிரியரின் அறிவுரைப்படி பணியாற்றலாம்.

 கிராம கல்விக் குழு மூலம் சம்பளம் வழங்கப்படும்.

வருகை புரியாத நாட்களுக்கு சம்பளம் இல்லை.

தேர்வு நாட்களில் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.ஆனால் பிற நாட்களில் வருகை புரிந்து ஈடு செய்யவேண்டும் .

தேர்ந்தெடுக்கபடும் பகுதிநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு எனில் ஒரு ஆசிரியர் அதிகபட்சம் 4 பள்ளிகளில் பணியாற்றலாம் .4 பள்ளிகளிலும் சம்பளம் பெறலாம்.ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு   மூன்று  நாட்களில் அரை வேலை நாட்கள் பணியாற்றவேண்டும்.                 இதனால்  பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs20,000 பெற வாய்ப்பு உள்ளது.

Saturday, 3 December 2011

ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, டி.இ.டி. தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, தினமலர் நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, நெட் அல்லது, ஸ்லெட் எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், டிஇடி தேர்வும் ஆசிரியர் பணிக்குச் செல்ல, ஒரு தகுதித் தேர்வு, அவ்வளவு தான். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும்.
ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும். இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும். வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.
  • அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது.
இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

எழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  எனினும், 2010-11 ஆம் ஆண்டுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 1,247 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  நடப்பாண்டுக்கு (2011-12) அறிவிக்கப்பட உள்ள பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆண்டிலிருந்து தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.  இந்தத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.  இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன முறையை மாற்றி பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார்.  அதன் விவரம்: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யும் முறையை அரசு கவனத்துடன் பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு, முதுகலை ஆசிரியர் நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே, எழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆணையிடப்படுகிறது. இந்த ஆணையை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்கு 3,4ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு ஆரம்பப் பள்ளிகளில், 1,734 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக, 9,300 பேருக்கு, டிசம்பர் 3, 4ம் தேதி, மாநிலம் முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கின்றன.
வேலை வாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன சுழற்சி வாரியாக, கட்-ஆப் தேதி வரையறைக்குள் வரும் 9,300 பேர் பட்டியலை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கியுள்ளது. இவர்கள் அனைவருக்கும், டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சம்பந்தப்பட்ட பணி நாடுநர்களுக்கு, சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் நகலை எடுத்துச் செல்லலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு முகாமிற்கு, என்னென்ன அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்பதை, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
* பள்ளி இறுதிச் சான்றிதழ் (10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2)
* ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்
* ஜாதிச் சான்றிதழ்
* வேலைவாய்ப்பு பதிவு அட்டை
* முன்னுரிமை பிரிவின் கீழ் இருப்பவர்கள் என்றால், உரிய அலுவலரிடம் பெற்ற சான்றிதழ்
* நன்னடத்தை சான்றிதழ்
* வெளி மாநிலங்களில் படித்தவர்களாக இருந்தால், ஆசிரியர் பயிற்சி இயக்ககத்தால், மதிப்பீடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* பெண்கள், திருமணம் ஆனவர்களாக இருந்தாலும், ஜாதிச் சான்றிதழ் தந்தையின் பெயரிலேயே இருக்க வேண்டும். கணவர் பெயரில் இருந்தால், ஏற்கப்பட மாட்டாது.
* ஊனமுற்றவர்களாக இருந்தால், 40 சதவீதம் ஊனம் இருப்பது குறித்து, சிவில் சர்ஜனுக்கு குறையாத நிலையில் உள்ள, அரசு மருத்துவரின் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
இந்த சான்றிதழ்களில், ஏதேனும் ஒன்றை கொண்டு வராவிட்டாலும், அவர் தகுதியற்றவராக கருதப்படுவார் என, தேர்வு வாரியத்தின் உறுப்பினர் - செயலர் வசந்தி அறிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், சான்றிதழ்களின் உண்மைத் தன்மை மற்றும் தகுதியான பணி நாடுநர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலை, வரும் 20ம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக, தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 28,596 பேருக்கு வேலை

சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 28,596 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளரும் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர். குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சொந்த கட்டிடங்களில் செயல்படும் 7,449 மையங்களை ரூ.47 கோடியே 61 லட்சம் செலவில் பழுது பார்க்கப்படும். மேலும், குழந்தைகளின் நலனுக்காக, கோடைக்காலத்தில் வெப்பத்தினாலும், குளிர் காலத்தில் போதிய வெளிச்சமின்மையாலும் அவதிப்படாமல் இருக்கும் வகையில், ரூ.27 கோடியே 21 லட்சம் செலவில் 45,345 குழந்தைகள் மையங்களில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு ஆகியவைகளை பொருத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், குழந்தைகள் இளம் வயதிலேயே கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கப்படும். இதற்காக, ரூ.23 கோடியே 78 லட்சம் செலவில் 29,727 குழந்தை மையங்களில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிப்பிடங்கள் உருவாக்கப்படும்.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 4,373 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 5,717 சத்துணவு சமையலர் பணியிடங்கள் மற்றும் 6,703 சமையல் உதவியாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 4,689 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 1,168 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் மற்றும் 5,946 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 28,596 பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் 69 பேர் அதிரடியாக மாற்றம்

தமிழகம் முழுவதும், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்களாக, 46 பேர், பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில், சமீபத்தில், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும், இவர்களைத் தொடர்ந்து, 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள 37 முதன்மை கல்வி அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ள இடங்களும் வருமாறு:-

1. பி.சுகுமார் தேவதாஸ்- புதுக்கோட்டை,
2. என்.ஆனந்தி- திருப்பூர்,
3. எஸ்.நாகராஜமுருகன்- மதுரை,
4. எஸ்.அசோகன்- கரூர்,
5. வி.குமார்- நாமக்கல்,
6. பி.ராணி- துணை இயக்குனர், சென்னை,
7. ஜி.மூர்த்தி- திண்டுக்கல் (எஸ்.எஸ்.ஏ.),
8. கே.சசிகலா- விருதுநகர்,
9. ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன்- நாகர்கோவில்,
10. கே.ராஜராஜன்- ஈரோடு.
11. எஸ்.செல்லம்- ராமநாதபுரம்,
12. ட்டி.மோகன்குமார்- திருவள்ளூர்,
13. எஸ்.சுகன்யா- தர்மபுரி,
14.எம்.எஸ்.பரிமளம் புதுக்கோட்டை(எஸ்.எஸ்.ஏ.),
15. பி.பொன்னையா- கோவை (எஸ்.எஸ்.ஏ.),
16. கே.செல்வக்குமார்- திருச்சி,
17. ப்பி.செல்வகுமாரி- காஞ்சீபுரம்,
18. ட்டி.ராஜேந்திரன்- கோவை,
19. எல்.டி.ரங்கநாதன்- தர்மபுரி (எஸ்.எஸ்.ஏ.).
20. பி.புண்ணியகோடி- விழுப்புரம்,
21. பி.குப்புசாமி- சென்னை,
22. பி.விஷ்ணு பிரசாத்- சிவகங்கை,
23. வி.ராதாகிருஷ்ணன்- சிவகங்கை (எஸ்.எஸ்.ஏ.),
24.பொன்குமார்- வேலூர்,
25. எம்.வாசு- நீலகிரி,
25. கே.ஸ்ரீதேவி- தேனி.
27. எஸ்.கே.விசுவநாதன்-ஈரோடு (எஸ்.எஸ்.ஏ.),
28. கே.பி.சீனிவாசன்- துணை இயக்குனர், பள்ளிக்கல்வி,
29.என். போஸ்- மதுரை (எஸ்.எஸ்.ஏ.),
30. பி.பகவதி நாடார்- திருநெல்வேலி,
31. கிரேஸ் பிராங்க்ளின்- திருவண்ணாமலை (எஸ்.எஸ்.ஏ.),
32. ஜி.ஜே.ராமச்சந்திரன்- நாகப்பட்டினம் (எஸ்.எஸ்.ஏ.),
33. சி.செல்வராஜ்- துணை இயக்குனர், தொடக்க கல்வி.
34. பி.கிரேஸ் சுலக்சனா ரத்தினாவதி- நாகர்கோவில் (எஸ்.எஸ்.ஏ.),
35. ஜே.சுதர்சன்- துணை இயக்குனர்,  மின் ஆளுமை
36. கே.ராமானுசம்- கிருஷ்ணகிரி,
37. எஸ்.தமிழ்மணி- சென்னை (எஸ்.எஸ்.ஏ.),

முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ள 19 பேரின் பெயர்களும், அவர்கள் ஏற்கவுள்ள புதிய இடங்களும் வருமாறு:-

1. எம்.கே.சுப்பிரமணியன்- தஞ்சை,
2. ஜி.மலர்க்கொடி- அரியலூர்,
3. எஸ்.சந்தான தஞ்சைவாணன்- நாகப்பட்டினம்,
4. எம்.சுப்பிரமணியன்- திருவாரூர்,
5. ஆர்.ஈசுவரன்- சேலம்,
6. எஸ்.வான்மதி- கடலூர் (எஸ்.எஸ்.ஏ.),
7. ஐசக் சுகிர்தராஜ்- தூத்துக்குடி (எஸ்.எஸ்.ஏ.),
8. ஆர்.சுப்பிரமணியன்- பெரம்பலூர்,
9. எஸ்.பூபதி- விழுப்புரம் (எஸ்.எஸ்.ஏ.).
10. சி.ஜெயலட்சுமி- ராமநாதபுரம் (எஸ்.எஸ்.ஏ.),
11. ஜி.சீதாராமன்- பெரம்பலூர் (எஸ்.எஸ்.ஏ.),
12. எஸ்.மதி- வேலூர் (எஸ்.எஸ்.ஏ.),
13. எஸ்.ருக்மணி- தூத்துக்குடி,
4. எ.நூர்ஜகான்- திருவண்ணாமலை,
15. கே.ஜி.மல்லிகா- காஞ்சீபுரம் (எஸ்.எஸ்.ஏ.),
16. வீ.பிரபாகரன்- திண்டுக்கல்,
17.ஆர்.வைத்தியலிங்கம் திருவாரூர் (எஸ்.எஸ்.ஏ.),
18. எம்.ரவிச்சந்திரன்- சேலம் (எஸ்.எஸ்.ஏ.).
19. சி.ஜோசப் அந்தோணி ராஜ் - கடலூர்,