welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday 3 December 2011

இடைநிலை ஆசிரியர்களுக்கு 3,4ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு ஆரம்பப் பள்ளிகளில், 1,734 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக, 9,300 பேருக்கு, டிசம்பர் 3, 4ம் தேதி, மாநிலம் முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கின்றன.
வேலை வாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன சுழற்சி வாரியாக, கட்-ஆப் தேதி வரையறைக்குள் வரும் 9,300 பேர் பட்டியலை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கியுள்ளது. இவர்கள் அனைவருக்கும், டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சம்பந்தப்பட்ட பணி நாடுநர்களுக்கு, சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் நகலை எடுத்துச் செல்லலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு முகாமிற்கு, என்னென்ன அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்பதை, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
* பள்ளி இறுதிச் சான்றிதழ் (10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2)
* ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்
* ஜாதிச் சான்றிதழ்
* வேலைவாய்ப்பு பதிவு அட்டை
* முன்னுரிமை பிரிவின் கீழ் இருப்பவர்கள் என்றால், உரிய அலுவலரிடம் பெற்ற சான்றிதழ்
* நன்னடத்தை சான்றிதழ்
* வெளி மாநிலங்களில் படித்தவர்களாக இருந்தால், ஆசிரியர் பயிற்சி இயக்ககத்தால், மதிப்பீடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* பெண்கள், திருமணம் ஆனவர்களாக இருந்தாலும், ஜாதிச் சான்றிதழ் தந்தையின் பெயரிலேயே இருக்க வேண்டும். கணவர் பெயரில் இருந்தால், ஏற்கப்பட மாட்டாது.
* ஊனமுற்றவர்களாக இருந்தால், 40 சதவீதம் ஊனம் இருப்பது குறித்து, சிவில் சர்ஜனுக்கு குறையாத நிலையில் உள்ள, அரசு மருத்துவரின் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
இந்த சான்றிதழ்களில், ஏதேனும் ஒன்றை கொண்டு வராவிட்டாலும், அவர் தகுதியற்றவராக கருதப்படுவார் என, தேர்வு வாரியத்தின் உறுப்பினர் - செயலர் வசந்தி அறிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், சான்றிதழ்களின் உண்மைத் தன்மை மற்றும் தகுதியான பணி நாடுநர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலை, வரும் 20ம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக, தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: