welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday, 3 December 2011

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 28,596 பேருக்கு வேலை

சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 28,596 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளரும் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர். குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சொந்த கட்டிடங்களில் செயல்படும் 7,449 மையங்களை ரூ.47 கோடியே 61 லட்சம் செலவில் பழுது பார்க்கப்படும். மேலும், குழந்தைகளின் நலனுக்காக, கோடைக்காலத்தில் வெப்பத்தினாலும், குளிர் காலத்தில் போதிய வெளிச்சமின்மையாலும் அவதிப்படாமல் இருக்கும் வகையில், ரூ.27 கோடியே 21 லட்சம் செலவில் 45,345 குழந்தைகள் மையங்களில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு ஆகியவைகளை பொருத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், குழந்தைகள் இளம் வயதிலேயே கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கப்படும். இதற்காக, ரூ.23 கோடியே 78 லட்சம் செலவில் 29,727 குழந்தை மையங்களில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிப்பிடங்கள் உருவாக்கப்படும்.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 4,373 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 5,717 சத்துணவு சமையலர் பணியிடங்கள் மற்றும் 6,703 சமையல் உதவியாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 4,689 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 1,168 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் மற்றும் 5,946 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 28,596 பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments: