welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Friday 19 August 2011

ஒரே கல்வி ஆண்டில் இரு படிப்புகள்

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் நாமக்கல் ஒ.மு.எண் 114/அ2/2009. ந.எண் 19.01.2009 ன் படி ஒரே காலத்தில் இரு பட்டப்படிப்புகள் பயில துறையின் முன் அனுமதி வழங்க இயலாது.





தொலைநிலைக் கல்வி மூலம் ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு கால Linkஅட்டவணைகளில் வெவ்வேறு படிப்பு பயின்றால் அது பதவி உயர்வுக்கு தகுதியானது.

... என்ற கடிதம் பல்வேறு நண்பர்களிடையே ஒரே காலத்தில் , மாதத்தில் கூட இரு படிப்புகளை பயிலலாம் என்ற எண்ணத்தையும் சில குழப்பங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இதில் சில கேள்விகள் எழுகின்றன..

1. ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு கால அட்டவணை என்பதற்கு இரு உயர்கல்வி படிப்பு கால அட்டவணைகளில் படிப்பு தொடங்கும் மாதம் மற்றும் முடியும் மாதம் மட்டும் வெவ்வேறாக இருந்தால் போதும், மற்றபடி ஒரே மாதம் இரு கால அட்டவனைகளிலும் இடம்பெறலாம் என பொருள் கொள்ள முடியுமா?

2. தொலைதூர கல்விமுறையில் படிப்புகாலம் என்பது நம் பணியாளர் நிர்வாகத்தை பொருத்தவரை ஒருவர் படிப்பில் சேரும் காலம் முதல் இறுதித்தேர்வு வரையிலான காலமா? அல்லது பல்கலைகழகம் வரையறுத்துள்ள ஜனவரி முதல் டிசம்பர் வரை, ஜூன் முதல் மே வரை போன்ற காலமா?

3. ஒரே கல்வியாண்டில் ஜூன் முதல் டிசம்பர் வரை வரை என ஒன்று, ஜனவரி முதல் டிசம்பர் வரை என ஒன்று, தாமதமாக சேர்ந்து ஆகஸ்ட் முதல் ஜூன் வரை ஒன்று (TNOU) , மார்ச் முதல் நவம்பர் வரை என ஒன்று ஆக நான்கு ஒரு ஆண்டு பட்டங்களை (தமிழ், ஆங்கிலம்,கணிதம்,வரலாறு) பயின்றால் அவை அனைத்தும் உயர்பதவி அடைய தகுதியானதா?


வெவ்வேறு என்பது சற்றும் தொடர்பில்லா இரு வேறு கால அட்டவணை என பொருள் கொள்ளுமாறு பல்வேறு கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே இது குறித்து தகவல் அறியும் சட்டம் மூலம் தெளிவான கேள்விகளோடு பதில் கோரப்பட்டுள்ளது .

ஏனெனில் ஏக காலத்தில் இரு படிப்பு பயின்ற ஒருவர் பதவி உயர்வு பெறும்போது அது ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் பாதிக்கப் படலாம்.

ஏற்கனவே வெளிவந்த அந்த செயல்முறைகள்...