முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி
நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
2011-12ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை
வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று
காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற
உள்ளது.
ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆயுத்தநிலையில்
இருக்க இத்தகவல் வெளியிடப்படுகிறது. எனினும் இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2 comments:
கம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே?
விசித்திரப் போராட்டம் இது கம்ப்யூட்டர் யுகம். ஆனால், கணினிக் கல்வி படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது தமிழக அரசு.இது பற்றிப் பேசிய கோவையைச் சேர்ந்த விஜய் ஆனந்த், ''கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியர் படிப்பான பி.எட் முடித்து விட்டு 1993 முதல் இன்று வரையில் 10
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கான பணி இடங்களை அரசு இன்னமும் உருவாக்கவே இல்லை. அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் கம்யூட்டர்கள் தரப்பட்டு இருக்கின்றன. 68 லட்சம் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். இப்படி கணினி யுகத்துக்குள் அரசு புகும் வேளையிலும் கணினி படித்த எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரமாகவும் வேதனையாகவும்இருக்கிறது. இப்போது, அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடத் தை நடத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும், அரசு எங்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வாணையம்தான் நடத்துகிறது. இதில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர் தேர்வுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கம்ப்யூட்டர் புரட்சி நடந்துவரும் சூழலிலும், எங்களைப் போன்ற ஆசிரியர்களைப் புறக் கணித்தால், கணினிக் கல்வி எப்படிச் சாத்தியம் ஆகும்.கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்ப்யூட்டரில் டிப்ளமோ படித்தவர்களை விதிவிலக்காக ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்து எடுத்தார்கள். பிறகு, அவர்களையே நியமனம் செய் வதற்காக தகுதித்தேர்வு நடத்தினார்கள். அந்தத் தேர்வில் தோல்வி அடைந்த 667 பேர் இப்போதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக மாதம் 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.பள்ளிக் கல்விக்கு இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கி இருக்கிறது. அதோடு, பள்ளிகளில் கணினி வழிக்கல்வி என்றும் சொல்லி இருக்கிறார்கள். அரசுப் பள்ளி களில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினால்தான் கணினி வழிக்கல்வி சாத்தியம். இதைக் கருத்தில் கொண்டு பணியிடங்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.விலையில்லா கணினியைக் கற்றுத்தர, ஆசிரியர் தேவை இல்லை என்று நினைக்கிறதோ அரசு?

Post a Comment