welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Wednesday 24 August 2011

பள்ளிக் கல்வித் துறை - மான்யக் கோரிக்கை எண்.43 - மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்

பள்ளிக் கல்வித் துறை
மான்யக் கோரிக்கை எண்.43
மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்
2011-2012
1. ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் :
"இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில் உருவாக்கப் படுகின்றது" என்பதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தினை நிர்ணயம் செய்வது பொதுத் தேர்வுகளே ஆகும். இதில் மாணவர்கள் தேர்வு பெறும் நிலையில் அவர்கள் மேல்நிலைக் கல்வி, தொழிற் கல்வி, மருத்துவக் கல்வி, பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் போன்ற உயர் கல்வியில் சேர வாய்ப்பு ஏற்படும். எனவே, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி சிறப்பாக அமைய கீழ் காணும் வகையில் 14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.



2. நூலகர் பணியிடங்கள் நிரப்புதல் :
மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் கிராமங்கள் தோறும் நூலகங்கள் உள்ளன. இந்நூலகங்கள் செம்மையாகச் செயலாற்றிட மாவட்ட நூலகங்களில் கீழ்க்காணுமாறு 1353 நூலகர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தப் பணியிடங்களுக்கான செலவினம் நூலக நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.



3. நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தல்:
தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் 6,7,8 வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிக்கும் பொருட்டும், கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்பார்வை செய்யவும் பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடங்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு அவசியமாகின்றன. எனவே, இக்கல்வியாண்டில் 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்
4.பிற பணியிடங்கள் நிரப்புதல் :
ஆசிரியர் பணியிடங்கள் தவிர நிர்வாக பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை விரிவுரையாளர் பணியிடங்கள் கல்வியின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு கீழ்க்காணும் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்.



5. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனுமதித்தல் :
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் அலுவலகப் பணிகளை நடைமுறைப்படுத்திட 344 பள்ளிகளுக்குத் தலா ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், 544 பள்ளிகளுக்கு 9 மற்றும் 10 வகுப்பு மாணவ மாணவியர்களின் அறிவியல் பாடத்திறனை மேம்படுத்திட உதவும் வகையில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நடப்பு ஆண்டில் அனுமதிக்கப்படும்.
6. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கு 2% முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் :
பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதி பெற்ற பணியாளர்களுக்கு 2% பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் வழங்கப்படுகிறது. இதேபோன்று, அமைச்சுப் பணியாளர்களில் முதுகலை ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பணி வழங்கும் வகையில் 2% முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
7. நபார்டு திட்டம் XI கீழ் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260 கோடி செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்:
பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற அறிவியல் பாடங்களைச் செய்முறை வாயிலாக உணர்ந்து கற்க ஆய்வுக்கூடங்கள் அவசியமாகின்றன. எளிய பரிசோதனைகளைத் தாமே செய்வதன் மூலம் பல அறிவியல் கோட்பாடுகளின் உண்மைத் தன்மையை சோதித்தறிந்து கற்றுக்கொள்ள ஏதுவாகும். இச்செயல்முறைக் கற்றலின் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்க 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260 கோடி செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள் , கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
8. மாணவர் நலன் கருதி தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் எழுத அனுமதித்தல்.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மார்ச் / ஏப்ரல் பொதுத் தேர்வில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று பாடங்களில் தோல்வியுறும் மாணவர்களுக்கு அந்த முழுக் கல்வியாண்டு வீணாகாமல், அந்த ஆண்டிலேயே அவர்கள் உயர் கல்வியினை தொடர்வதற்கு ஏதுவாக 2002ஆம் ஆண்டு முதல் ஜுன் / ஜுலை மாதத்தில் ஒரு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மாணவர்களின் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தற்போது நீட்டிப்பு செய்து, ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்களாகவும் மார்ச் / ஏப்ரல் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு, தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களுக்கும் அக்கல்வியாண்டிலேயே ஜுன் / ஜுலை மாதத்தில் சிறப்புத் துணைப்பொதுத்தேர்வு எழுதுவதற்கு அனுமதித்து வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
9) ஸ்மார்ட் கார்டு
ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், பெற்றோர், முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன் மூலம் மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எப்பள்ளியிலும் சேர முடியும். மேலும் மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வழிவகை செய்யப்படும்.
10) ஸ்மார்ட் வகுப்பு
ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் கற்றல் கற்பித்தல் மிக சிறப்பாக அமையும். வகுப்பறை முழுவதும் கணினி முறையில் பயன்பெறும். எடுத்துக்காட்டாக இதயம் பற்றிய பாடம் நடத்தும்போதும் இதயத்தின் செயல்பாடு உண்மையாக ஒலி, ஒளி அமைப்பில் வகுப்பின் வெண்திரையில் தோன்றும். இதன் மூலம் கற்றல் கற்பித்தல் நிகழும்போது முழுமையான கற்றல் நிகழும். பார்த்தல், கேட்டல் திறன் மூலம் கற்றவை நீண்ட நாட்கள் மாணவர் மனதில் நிற்கும். முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளில் 1.25 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படும்.
11) தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்
தற்போதுள்ள கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிவதற்காக ஒரு வல்லுநர் குழு அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இசைவளித்துள்ளார்கள்.
12) பள்ளிசெல்லாக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் சமூகநலப் பாதுகாப்புச் சிறார் பள்ளி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நலப்பள்ளி போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளை வழங்குதல்
இலவசச் சீருடைகள், இலவசப் பேருந்துப் பயண அனுமதி அட்டைகள், இலவச மிதி வண்டி, கல்வி உதவித்தொகை போன்ற அரசுச் சலுகைகள் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, பள்ளிக்கு வெளியே மாற்றுப் பள்ளிகளிலும், உண்டு உறைவிடப் பள்ளிகளிலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நலப் பள்ளிகளிலும், கஸ்துhரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களிலும் சமூக நலப்பாதுகாப்புக்கான சிறார் பள்ளிகள் போன்ற பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் வழங்கப்படும்.
13) அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணைய வசதி ஏற்படுத்துதல்.
தகவல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தங்களது பாடங்கள் தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைப் பாடநூல்களுக்கு வெளியேயும் தேடி சேகரிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தகவல்களை எளிதாக தேடிப்பெறவும், சுயமாகச் சிந்திக்கவும், தமது படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளவும், உலக நாடுகளின் கலாச்சாரச் செரிவுகளைத் தெரிந்துகொள்ளவும், இணைய வசதி அவசியமாகிறது. எனவே, அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
14) பள்ளிகளுக்குப் பல்நோக்குத் தொடர்புச் சாதன ஒளி உருப் படிவுக்கருவி மற்றும் திரை வழங்குதல்:
காணொளிக்காட்சிகள் மூலம் பல்வேறு அறிவியல் நிகடிநவுகளையும் இயற்கைச் சீற்றங்களையும், செடிகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவை பற்றி கண்டு, கேட்டு, எளிதில் புரிந்துகொள்ள இயலும். பல பள்ளிகளில் மிகவும் குறைந்த விலையில் பல கல்வி ஒளி ஒலி நாடாக்கள் / குறுந்தகடுகள் கிடைக்கின்ற போதும் அதனை பயன்படுத்துவற்கான ஊடக சாதனங்கள் இல்லாத காரணத்தால், அவற்றை மாணவர்களுக்கு காண்பிக்க இயலாத நிலை உள்ளது. எனவே, மாணவர்களுக்கு முழுப்பயனும் கிடைக்கப்பெற 12,000 பள்ளிகளுக்கு 42 கோடி செலவில் பல்நோக்குத் தொடர்புச் சாதன ஒளி உருப் படிவுக்கருவி மற்றும் திரை வழங்கப்படும்.
15) ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தினை மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாகத் தரம் உயர்த்துதல் :
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை அரசு மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாகத் தரம் உயர்த்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இசைவளித்துள்ளார்கள்.
16) கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS)
இத்திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டிடவசதி போன்றவைகள் பதிவு செய்யப்ப்படும். மேலும், அப்பள்ளிகள் அனைத்திலும் பணியாற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓடீநுவு பெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்ப்படும். மேலும், இம்முறையில் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை) இடைநிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவைகள் பதிவு செய்யப்ப்படும். மாணவர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் அம்மாணவரின் நிலை கண்காணிக்கப்படும்.
17) நமது குழந்தைகள் திட்டம்
மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சமூகக் கலாச்சார நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து, பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் முழுமையான வளர்ச்சியும், வாடிநதிறன்களையும் பெறும் வகையில் "நமது குழந்தைகள் திட்டம்"செயல்படுத்தப்படும்.


No comments: