welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday, 24 December 2011

பதவி உயர்வுகள்.

                                                     பதவி உயர்வுகள்.
                               1. ஓர் இடைநிலை ஆசிரியர் ஓர் அலகின் (Unit) முன்னுரிமைப்பட்டியல் (Seniority) அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வைப் பெறுகின்றார்.
                              
                             2. ஓர் அலகிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய ஏற்ற முறையில் உள்ள ஆசிரியர்களின் கூட்டு முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலும் உயர்கல்வித் தகுதி அடிப்படையிலும் நடுநிலைப் பள்ளி பட்டநிலை ஆசிரியர் அல்லது தமிழாசிரியர் பதவியுயர்வு வழங்கப்படுகிறது.

                            3. ஓர் அலகின் கல்வியியல் பட்டத்தேர்ச்சி (B.Ed Degree) பெற்றுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / நடுநிலைப்பள்ளி பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் ஆகிய முவ்வகையினரின் ஊட்டுபதவி (Feeder Cadre) ஏற்ற நாளின் அடிப்படையிலான கூட்டு முன்னுரைப் பட்டியலின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வகையினரிடையே உள்ள அடிப்படை ஊதிய வேறுபாட்டை பொருட்படுத்தாமல் இப்பதவி உயர்வு வழங்கப்படும். அரசாணை நிலை எண் 166 ப.க.து. எண். 2 நாள்7.6.99

                             4. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டநிலை தலைமையாசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு மாற்றத்தக்கப் பணியாக (Inter Changeable) வழங்கப்பெறுகிறது. இதற்கு துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
                            5. வெளி ஒன்றியத்துக்கோ , நகராட்சிக்கோ மாற்றலில் செல்லும் இடைநிலை ஆசிரியர், தகுதிகாண்பருவம் முடித்தவராயின் புதிய மேலாண்மை அழகின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தகுதிகாண்பருவம் முடித்தவர்களுக்கு இறுதியில் சேர்க்கப் பெற்று பதவி உயர்வு பெறுவார்.

                           6. தமிழாசிரியர் பதவியில் உள்ளவர் கல்வியியல் இளையவர் (B.Ed.) பட்டம் பெற்றிடாவிடினும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியுயர்வுக்கு தகுதியுடையவராவார். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/2000 நாள் 13.6.2000 )
                               7. ஓர் இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் பதவியுயர்வில் எதையேனும் விட்டுக் கொடுத்து விடுவதனால் மற்ற பதவியுயர்வை பெரும் தகுதியை இழந்தவர் ஆகார். அவருக்கு மற்ற பதவியுயர்வு முன்னுரிமைப்படி வழங்கப்பெறல் வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/ நாள் 23.12.1999)

                         8.Double Major, Trible Major பட்டம்பெற்றவர்களில் ,அவர்கள் பி.எட். பட்டம் பெற்றிருந்தால் , அவர்கள் படித்த முக்கிய பாடங்களின்படியும் உரிய முன்னுரிமையின்படியும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்த்தல் வேண்டும். பி.எட். வுடன் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர் கூடுதலாக மற்றொரு பாடத்தில் ஒரு ஆண்டு படிப்பு முடித்து பட்டம் பெற்றிருந்தால் அந்தப் பாடத்திற்கும் அவரை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 36679 /D3/2008 நாள் 18.11.2008)