welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Wednesday, 7 December 2011

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

சென்னை: வரும் மார்ச் மாதம் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்த எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் பாடமுறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, 2011-2012-ம் கல்வி ஆண்டுமுதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

எனவே, 2012 முதல் நடைபெற இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர் மற்றும் அனைத்து பாடங்களையும் முதன் முறையாக தேர்வு எழுத இருக்கும் தனித்தேர்வர்கள் மார்ச் 2012 பொதுத்தேர்விலிருந்து சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. தனி தேர்வர்கள் விண்ணப்பித்தல் குறித்த அறிவிக்கை தனியாக வெளியிடப்படும்.

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளில் பழைய பாடமுறை திட்டத்தில் தேர்வு எழுதி, ஒருசில பாடங்களில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு பழைய பாடத்திட்டத்தில் (நடைமுறையில் உள்ள பாடத்திட்டம்) மார்ச் 2012 மற்றும் செப்டம்பர், அக்டோபர் 2012 ஆகிய இரு பருவங்களில் (ஜூன், ஜூலை உடனடி தேர்வுகளை உள்ளடக்கி) தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இரு வாய்ப்புகளை பயன்படுத்தி பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத பாடங்களை தேர்வெழுதலாம் என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட திறந்தவெளிப்பள்ளியில் பயின்று தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதுவோருக்கும் இது பொருந்தும். இந்த இரு பருவ தேர்வுகளைத்தவிர, எக்காரணம் கொண்டும் மீண்டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.

No comments: