welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Thursday, 31 May 2012

பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்பு

        கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு:
 ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,' என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

யார் எழுத வேண்டாம்?
இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர்.அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை.இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


காரணம் என்ன?
தேர்வை தள்ளி வைப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்த வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்:கேள்வித்தாள்கள் இன்னும் தயாராகவில்லை; அதேபோல், "ஹால் டிக்கெட்' தயாரிக்கும் பணிகளும் முடியவில்லை. இதற்கிடையே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டுள்ளனர்.இப்படிப்பட்ட விண்ணப்பங்களை அப்படியே ஏற்பது, பின்னாளில் பிரச்னை வரலாம். எனவே, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள், தவறுகளை சரி செய்யவும், விடுபட்ட இடங்களை நிரப்பவும், ஒரு வாய்ப்பு தரப்படும்.அதன்படி, விண்ணப்பதாரர், விண்ணப்ப எண்களை இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் உள்ள தவறுகள் அனைத்தும் தெரிய வரும். இதை சரி செய்த பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதுபோன்ற பணிகளுக்காகவும், தேர்வர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாகவும், ஒரு மாதம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 12ம் தேதி விடுமுறை:
அரசு வேலை நாளில், டி.இ.டி., தேர்வு நடப்பதால், அதில் பணிபுரியும் ஆசிரியர் பங்கேற்க வசதியாக, அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும்; வேறொரு நாளில், பணி நாளாக அது ஈடு செய்யப்படும் என்றும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, 29 May 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் நிலை

  ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் நிலை பற்றி அறிய
இங்கே அழுத்தவும்

Recruitment of TamilNadu Teachers Eligiblity Test - Status of your Application form

Monday, 28 May 2012

டி.இ.டி., தேர்வு, ஜூலை 12 ஆம் தேதிக்கு மாற்றம்

"டி.இ.டி., தேர்வு, ஜூலை 12 ஆம் தேதிக்கு மாற்றம் - டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி"

All the Best Prepare Well....

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - தமிழக அரசு ஆணை.

அரசாணை (நிலை) எண்.121 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.17.05.2012. 
1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.

2. சமபந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகளை ரத்து செய்யப்படும்.
3. பள்ளிக் குழந்தைகளும், மாணவ மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். 
5. பள்ளி மாணவ மாணவிகளின் மனநிலை பாதிக்கும் பிரச்சனைகளை களைவதற்கான உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்கென பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, இதன் மூலம் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.  
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 26 May 2012

முப்பருவ தேர்வு முறை பயிற்சி -விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்

முப்பருவ தேர்வு முறை பயிற்சி -விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் . இது தொடர்பாக மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 25.05.2012. கூறப்பட்டுள்ளதாவது .

ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தற்போது எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால் அந்த மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்.

தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

Friday, 25 May 2012

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக ஆணை வெளியீடு.


                அரசாணை (டி1) எண். 158 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.18.05.2012
 பள்ளிக்கல்வி -  2012 - 13 ஆசிரியர்  பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து  தமிழக ஆணை வெளியிட்டுள்ளது.
        
             உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்த பின்னரே பொது மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி நிரவல் செய்யும் போது தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 
                  

Wednesday, 23 May 2012

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முன்பு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட, தேர்வு செய்யப்பட்ட, அதற்கான முழு பணிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.

தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (என்சிடிஇ) அறிவித்துள்ளபடி, 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முன்பு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட, தேர்வு செய்யப்பட்ட, அதற்கான முழு பணிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பிறகு தேர்வு செய்யும் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வு எழுத வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TET தொடர்பான திருத்த அறிவிப்பு வெளியீடு

    23.08.2010 முன்பே (அதாவது 22.08.2010 அன்றோ அதற்கு முன்போ ) ஒரு நபருடைய பணியமர்வுக்கான (அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் பணி )  செயல்பாடு முறையான அறிவிப்பின் மூலம்  தொடங்கி இருந்தால், அவருக்கு TET எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அந்நபர் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று இருக்வேண்டும்.

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.


மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 15.05.2012
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை  ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.
பயிற்சி நடைபெறும் நாள். 28.05.2012 முதல் 31.05.2012 வரை
பயிற்சி நடைபெறும் இடம் : நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இடம் அனைத்து வசதிகளுடன் (குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமுள்ள பயிற்சியறை) உள்ளதாக இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சிக்கு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிற்றுவிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாது அழைக்கப்பட வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் எந்தவொரு ஆசிரியருக்கும் பய்ர்சியளிக்கபடாமல் விடுபடுதல் கூடாது.
* தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பொது அமர்வாக வகுப்பு நடத்தி முடிக்க வேண்டும்.
* ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சமாக 60 நபர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.
* பொது அமர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன், அடுத்த அமர்வில் பாடவாரியாக பங்கேற்பாளர்களை அமர வைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

Saturday, 19 May 2012

திட்டமிட்டபடி ஜூன் 3-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி.


டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.
எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 54 பேர், தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு, "ஹால் டிக்கெட்" தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும்; இணையதளத்திலும் வெளியிடப்படும்.
வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை வைத்தே, தேர்விலும் பங்கேற்கலாம்.
முதுகலை தேர்வு: வரும் 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதே நாளில், ரயில்வே தேர்வும் நடப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி விசாரித்ததில், ஐ.டி.ஐ., - பி.எஸ்சி., பாலிடெக்னிக் போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கான தேர்வுதான் அன்று நடக்கிறது.
அத்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே, முதுகலை ஆசிரியர் தேர்வு, 740 மையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை குறித்தும், தவறான தகவல்களை யாராவது பரப்பினால், அதை தேர்வர்கள் நம்பக்கூடாது.
தேர்வு, நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். தகுதி அடிப்படையில்தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இந்த விஷயத்தில் தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும். டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 5,451 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர்.
விடைகள் வெளியீடு: தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விடைத்தாளுடன் சேர்த்து மற்றொரு விடைத்தாள் வெற்று நகல் வழங்கப்படுகிறது. விடைகளை குறிப்பிடும்போது, அது நகலிலும் பதிவாகும். தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிட்டதும், இனி விடைகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகள்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தத் தேர்வுகளை வெளிப்படையாக நடத்தும் வகையில் விடைகள், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் சுர்ஜித் கே. சௌத்ரி.

TET - 2012 தேர்வில் வெற்றிபெற நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது...


தமிழக அரசு நடத்தும் 2012ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்விற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இந்த நேரத்தில், நீங்கள், குறைந்தபட்சம் அடிப்படை தயார்படுத்தலையாவது முடித்திருக்க வேண்டும்(அதாவது தேர்வுக்குப் படித்தல்).
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தை பெறுவது எப்படி என்பதை அறிதல் வேண்டும். தேர்வுக்கான கேள்வித்தாள் எவ்வாறு இருக்கும்? என்னால், 150 கேள்விகளுக்கு வெறும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியுமா? Multiple choice கேள்விகள் தேர்வுகளுக்காக நான் பயிற்சி எடுக்க வேண்டுமா?

மாதிரி பேப்பர்களைக் கொண்டு வீட்டில் பயிற்சி செய்தால், நிஜ தேர்வுக்கான சரியான பயிற்சியை என்னால் பெற முடியுமா? நான் பலவீனமாக இருக்கக்கூடிய அல்லது நன்றாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? என்னுடைய புலமையை அளவிடுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.
தேர்வு எழுதுவதற்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நீங்கள் எளிதாகப் பெற வேண்டுமெனில், அதற்கு மாதிரி தேர்வே(model or mock test) ஒரு சிறந்த வழியாகும். இதுபோன்ற தேர்வுகளை எழுத, பிரிண்ட் செய்யப்பட்ட படிவங்கள் answer key -யுடன் கிடைக்கின்றன. இதுபோன்ற மாதிரி தேர்வுகளை எழுதும்போது, உண்மையான தேர்வு சூழல் போன்ற ஒன்றை உருவாக்கி எழுதிப் பார்க்க வேண்டும்.
மேலும், நிபுணர்களால் வழங்கப்படும் மாதிரித் தேர்வுகளை நீங்கள் எழுதிப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில், அந்த நிபுணர்களுக்கு, உங்களின் தேர்வை பகுப்பாய்வு செய்த அனுபவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற மதிப்பெண் பற்றிய தங்களின் மதிப்பீட்டை அவர்கள் வழங்குவதோடு, நீங்கள் எதில் பலவீனமாக இருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் எவை போன்றவை பற்றிய ஆலோசனைகளையும் அவர்கள் தருகிறார்கள்.
நீங்கள் மாதிரி தேர்வை எப்போது எழுதலாம் என்ற கேள்வி எழலாம்? உங்களின் அடிப்படை தயார்செய்தலை முடித்தப் பின்னரே, மாதிரி தேர்வை எழுத வேண்டும். மேலும், நிஜ தேர்வுக்கு, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் மாதிரித் தேர்வை எழுதுதல் சிறந்தது. இதன்மூலம் உங்களின் நிலைப் பற்றிய சிறந்த மதிப்பீட்டை நீங்கள் பெறுவீர்கள்.
இந்த 15 நாட்களில், குறைந்தபட்சம், 2 முதல் 3 மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதலாம். ஒவ்வொரு தேர்வின் முடிவிலும், உங்களின் முன்னேற்றம் மற்றும் பலவீனங்களை ஆய்ந்து, அதன்மூலம் நிஜ தேர்வுக்கு உங்களை சிறப்பாக தயார்செய்து கொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகள் என்பவை, உங்களின் பலவீனங்களை அறிந்து, அதன்மூலம் உங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பெரிதும் பயன்படுபவை. நீங்கள் செய்த பிழைகளுக்கான காரணத்தை நீங்கள் கண்டுபிடித்து, அதை களையலாம். இத்தகைய தேர்வுகளின் மூலமாக, நீங்கள் அடிக்கடி மற்றும் ஒரே ஒருமுறை மட்டுமே செய்த தவறுகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
தயாராதலை அப்போதுதான் முடித்திருக்கும் ஆசிரியர்கள், முழு அளவிலான மாதிரி தேர்வுகளை எழுதுதல் நலம். இதன்மூலம், நிஜ தேர்வு நாளில் எவ்வாறு எழுதலாம் என்ற ஐடியா கிடைக்கும்.
kalvimalar.com/tntet -ல் ஆன்லைன் மாதிரி தேர்வும், உங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் ஆப்லைன் மாதிரி தேர்வையும் எழுதலாம்.
தேர்வில் வெற்றிபெற எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

Wednesday, 2 May 2012

பத்தாம் வகுப்பு ஏப்ரல் 2012 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய கீழுள்ள கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு ஏப்ரல் 2012 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய கீழுள்ள கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்

2011- 2012 மற்றும் 2012 - 2013 அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்கள்


ஆசிரியர்கள்                                                      2011-12          2012-13    மொத்தம்
முதுநிலை ஆசிரியர்கள்                                4272              2312                    6584
பட்டதாரி ஆசிரியர்கள்                                   19057            6768                   25825
இடைநிலை ஆசிரியர்கள்                             9487             3433                   12920
சிறப்பாசிரியர்கள்                                                865                823                     1688
தலைமையாசிரியர்கள்                                   775               1013                    1788
பகுதிநேர ஆசிரியர்கள்                                16,549           -------------             16,549
மொத்த ஆசிரியர் பணியிடங்கள்                                                              65,354
ஆசிரியரல்லாத பணியிடங்கள்                7,308               6,786                14,094
மொத்த பணியிடங்கள்                                                                                   79,448

டி.என்.பி.எஸ்.சி. விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 500 கணினி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் இணையதளம் வழி பதிவு சேவை மையத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்து ஆர்.நடராஜ் கூறியது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 மற்றும் செயல் அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளுக்கான 10,718 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மே-28 ம் தேதி. இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50, தேர்வுக்கட்டணம் ரூ.75. இந்தக் கட்டணங்களை இணையதளம் வழியாகவோ அல்லது பணம் செலுத்துச் சீட்டை (செலான்) பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 820 அஞ்சலகங்கள், இந்தியன் வங்கியின் 805 கிளைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை வைத்திருக்கவேண்டும். மேலும் தங்கள் கல்வித் தகுதி, பிற முன்னுரிமை கோருவதற்கான சான்றுகளையும் வைத்திருக்கவேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு உதவ தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா தலைமையிடங்களில் 500 இணையதள வழி பதிவு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய வழி பயன்பாடு பற்றி அறியாதவர்களும், இணைப்பு இல்லாதவர்களும் இந்த சேவை மையங்களைப் பயன்படுத்தலாம்.
இந்த சேவை இலவசமாகும். இந்த சேவை மையம் குறித்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
இணையவழி மூலம் கடந்த 2 நாள்களில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
245 தேர்வு மையங்கள்:÷இதுவரை தேர்வாணையத்தின் தேர்வுகள், 104 மையங்களில் நடத்தப்பட்டன. இந்த முறை 245 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டம் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 24 மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகள் தரைத் தளத்தில் அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத தங்களுக்கு உதவியாளர்கள் தேவையா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
நிரந்தரப் பதிவு முறை: இணையதள வழி விண்ணப்பங்களைத் தவிர ஒருமுறை பதிவு செய்தால் 5 ஆண்டுகள் தேர்வு எழுதும் நிரந்தரப் பதிவு முறையை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுபோன்று நிரந்தரப் பதிவு முறையை மேற்கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள், ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதும். எனினும், அந்தந்தத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த முறையில் இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டையும் இணையதளம் மூலம் பெறலாம் என்றார் நடராஜ்.