அரசாணை (நிலை) எண்.121 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.17.05.2012.
1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.

2. சமபந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகளை ரத்து செய்யப்படும்.
3. பள்ளிக் குழந்தைகளும், மாணவ மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

5. பள்ளி மாணவ மாணவிகளின் மனநிலை பாதிக்கும் பிரச்சனைகளை களைவதற்கான
உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்கென பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல்
ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை
மையங்கள் ஏற்படுத்தி, இதன் மூலம் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வும்,
ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.