welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Friday 10 February 2012

18,311 பட்டதாரி ஆசிரியர் இந்த ஆண்டுக்குள் தேர்வு மே அல்லது ஜுனில் தகுதித்தேர்வு


     ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாகியுள்ளதன் மூலம் இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பட்டதாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இந்த ஆண்டு நடைபெறும் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை இறுதிசெய்யும் பணியில் தமிழக அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தகுதித் தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை அவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் 18,311
இடைநிலை ஆசிரியர்கள் 5,451
ஆசிரியர் பயிற்றுநர்கள் 634
சிறுபான்மை மொழிப்பாட
ஆசிரியர்கள் 32
உடற்கல்வி பயிற்சி ஆசிரியர்கள் 687
தையல் ஆசிரியர்கள் 47
இசை ஆசிரியர்கள் 41
ஓவிய ஆசிரியர்கள் 78
விவசாய ஆசிரியர்கள் 25
மொத்தம்: 28,201