சென்னை, பிப்.11 - தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க
பள்ளியில் புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. அதற்காக அரசு ஒரு அரசாணையை
வெளியிட்டது. அதில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது தகுதி தேர்வு
எழுதி அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்
என்று அறிவித்திருந்தது. அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த
மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு நியமிக்கயுள்ள புதிய ஆசிரியர்கள் ஏற்கனவே ஆசிரியர்கள் பட்டம் படித்திருத்தாலும் கூட, கட்டாயமாக தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்சி பெற வேண்டும். ஏற்கனவே நாங்கள் பட்டம் படித்து முடித்துவிட்டோம், எங்களுக்கு புதிதாக வேலையில் அமர்த்தும் முன்னர் ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும் என்பது எங்களுக்கு கஷ்டமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே 27 பேர் ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்துவிட்டார்கள். அவர்களை திரும்ப தேர்வு எழுத செய்வது அது அவர்களுக்கும் எங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசின் கட்டாய தகுதி தேர்வு என்ற இந்த அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவு விட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, மேலும் தமிழக அரசு ஆசிரியர் நியமனத்திற்கு நடத்தப்படும் தகுதி தேர்வு நடத்த அரசுக்கு அதிகாரம் உண்டும். ஏனெனில் இது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை. ஆகவே தமிழக அரசின் இந்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.