welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Sunday, 31 July 2011

TNPSC GROUP II (2) EXAM ANSWER KEY FOR EXAM HELD ON 30.07.2011

TNPSC Group 2 Exam Answer Key 2011 | CSSE Group 2 Solutions & Solved Question Paper Dated 30-07-2011

Check this article for TNPSC Group 2 exam answer key 2011, CSSE Group 2 exam solutions & solved question papers 2011 etc. Tamilnadu Public Service Commission conducted Combined Subordinate Service Examination Group 2 on 30th July 2011 (30-07-2011). All the candidates who wrote the examination are eager to get the answer key and cut off mark details of TNPSC Group 2 examination. There are totally 6,695 vacancies available for the post.

The answer key of TNPSC CSSE Group 2 examination will be posted shortly in this page. The answer key is also available on the official website of Radian IAS academy website from 7 pm on 30th July 2011 onwards. CSSE Gropu 2 exam online discussion will be also available that time. Candidates can bookmark this page for TNPSC Group 2 exam answer key 2011. Stay on this page for latest updates.

TNPSC Group 2 Exam Answer Key 2011
GROUP-II 2011 GENERAL ENGLISH KEYS

Saturday, 23 July 2011

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!


      பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக் கற்றுக்கொடு!'' என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ?

தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம்.

65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?



கலைஞரின் 'இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்... அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’

கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை... தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.

இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக... ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?

இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் 'உள்நோக்கம்’ என்பதுதானே!

உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்... 'தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?

இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்... என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?

இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?

தேர்தல் நெருங்க... நெருங்க... எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்... இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். 'எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?

ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்... இலவசமாக்கப்பட்டு இருக்க​வேண்டி​யது கல்வியும், மருத்துவமும்தானே... ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, 'உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்​காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், 'மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்​கள்... கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா... அயோக்கிய மாற்றம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்​களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்​றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா... ''ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!''

அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்​படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்​றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே... நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்... அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?

நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே... தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?

உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள் மாறிக்கிடக்கிறார்களே... அடுப்பு இலவசம், உடுப்பு இலவசம், மின்சாரம் இலவசம், சம்சாரம் இலவசம் (இலவசத் திருமணங்கள்), முட்டை இலவசம், சட்டை இலவசம் என அள்ளி வழங்கும் இந்த அரசாங்கம் தேர்தல் நெருங்குவதால் சீக்கிரமே இன்னொரு இலவசத்தையும் அறிவிக்கப் போகிறது. இனமானம் மிகுந்த தன்மானம் தளும்பிய தமிழர் பெருமக்களே... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், காத்திருங்கள்... 'இல்லங்கள் தோறும் பிள்ளைகளும் இலவசம்!’

Thursday, 21 July 2011

பள்ளி கல்வித்துறை முடிவு ஆசிரியர் நியமனத்துக்கு தேர்வு நடத்த திட்டம்


           தேர்வு நடத்தி ஆசிரியர்களை தெரிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பல ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு 6,000 பேர் பணி நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதில் 5,800 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அதிமுக அரசு தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. சமச்சீர் கல்வியில் திருத்தம் கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையே தெரிவுப் பட்டியலில் இடம்பெற்ற பட்டதாரிகள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பட்டதாரிகள் நியமனத்தில் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது. அதன் அடிப்படையில், தற்போதும் தேர்வு நடத்துவார்களா அல்லது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தெரிவு செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள சலுகைகள் தொடரும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தலின்போது தெரிவித்தார். அதனால், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதிகாரிகளின் கருத்தின்படி தேர்வு நடத்தலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது இதற்கிடை யே, ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட 5,800 பேரையும், சான்று சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 12,000 பேரையும் இந்த ஆண்டில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கல்வி அதிகாரிகள் கல்வித் தரத்தை முன்வைத்து, தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மட்டும் முதல் மூன்று இடங்களில் அதிக அளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பிலும் அதிக அளவில் செண்டம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் அதிக அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால்தான் இந்த அளவு தேர்ச்சி வீதம் கிடைத்துள்ளது என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுபோல 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட்டால் தரமும், தேர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்யப் போவதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதை அரசும் வரவேற்றுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்களை தேர்வு செய்ய நடத்த வேண்டிய தேர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்ததும், அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, 8 July 2011

எதிர்பார்ப்பு: 7 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது, 51 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவதற்கு,வாய்ப்பு உருவாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.

 இந்த வகையில், 7 சதவீத உயர்வு, ஜூலை முதல் தேதியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

"ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை"

     ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், 
இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
 மாறாக அவர்கள் தரும் தகவல் அடிப்படையில் வருமான வரி வசூல் செய்யப்படும்.
 இது, நடப்பு நிதியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா, நிருபர்களிடம் கூறியதாவது:
 ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், வருமான வரி 
கணக்கு தாக்கல் ( ரிட்டர்ன்) செய்ய வேண்டியதில்லை. இந்த திட்டப்படி,
 மாதம் சம்பளம் பெறுவோர் பயனடைவர். இதன்படி, கடந்த நிதியாண்டிற்கான 
வருமான வரி கணக்கை , நடப்பாண்டில் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
 சம்பளதாரர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் வருமான வரி
 செலுத்துவதற்காக அளிக்கும் படிவமே (பார்ம் 16) ரிட்டர்னாக எடுத்து
 கொள்ளப்படும். மேலும், கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்திருந்தால்,
 அதை திரும்ப பெறுவதற்காக (ரீபண்ட்) வருமான வரி கணக்கு தாக்கல் 
செய்யலாம்.
 மேலும், வட்டி போன்ற இதர வருவாய் ஏதும் இருந்தால், 
அதையும் பார்ம் 16ல் தெரிவித்து , வரியை பிடித்தம் செய்ய
 தங்களது நிறுவனத்திடம் கூறலாம். இந்த புதிய முறை மூலம்,
 மாத சம்பளதாரர்கள், 85 லட்சம் பேர் பயன் பெறுவர். ஆண்டு 
வருமானம், ஐந்து லட்ச ரூபாயை தாண்டுபவர்கள், வழக்கம்
 போல வருமான வரி கணக்கு (ரிட்டர்ன்)தாக்கல் செய்ய
 வேண்டும். இது பற்றி அறிவிப்பு, இம்மாத முதல் வாரத்தில்
 வெளியிடப்படும். இவ்வாறு சுதிர் சந்திரா கூறினார்.

Thursday, 7 July 2011

தமிழகத்தில் கட்டாயக் கல்வி சட்டம் அமல் : 15 ஆயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க திட்டம்

கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்த தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் 15,000 ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, விரைவில் 15,000 ஆசிரியர்கள் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேற்கண்ட சட்டத்தில் தெரிவித்துள்ளபடி 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விகிதாசாரத்தை பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்றால், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதன்படி, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 4,700 பள்ளிகளில் கணக்கெடுக்கப்பட்டது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் நீங்கலாக, கூடுலாக 8,000 ஆசிரியர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளதுஅதேபோல், தொடக்கப் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் இயங்கும் 37,486 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் நீங்கலாக 7,000 ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது.கூடுதல் ஆசிரியர்கள் தேவை மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனரகங்கள் தயாரித்துள்ளன. இவை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கும், சம்பளத்துக்கான நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்யும். அரசு அனுமதிவழங்கியதும் விரைவில் மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேபோல், ஒரு வகுப்பில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் அந்த வகுப்புகளில் உடற்கல்வி, தொழில், ஓவிய ஆசிரியர்கள் ஆகியோர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 6,000 பள்ளிகளில் 18,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tuesday, 5 July 2011

அரசு ஊழியர்களுடன் நல்லுறவு: வதந்திகளை நம்பாதிருக்க யோசனை

அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், இந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், வதந்திகளை நம்பவேண்டாமென்றும் உத்தரவாதம் அளித்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர், பணியாளர் நலத்துறை செயலர் அழைத்துப் பேசினர். இதில், தலைமைச் செயலக சங்கம், "சி அண்டு டி' பிரிவு ஊழியர்கள் சங்கம், என்.ஜி.ஓ., சங்கம் உட்பட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, "அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த அரசு, ஊழியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறது' என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

"முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஈட்டு விடுப்பு எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும். சனிக்கிழமைகளை பணி நாளாக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். எவ்வித எதிரான நடவடிக்கையை எடுக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் இந்த கருத்தை தங்களது சங்கத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்கள் நன்றாக செயல்பட்டால் தான், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும், அரசு ஊழியர்கள், இந்த அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். 

அரசு ஊழியர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கைகள் பற்றி இன்னொரு நாளில் பேசலாம் என்றும், சலுகைகள் குறித்து பட்ஜெட் சமயத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினர். ஊழியர் சங்க நிர்வாகிகளும், தங்களுக்கு இந்த அரசு மீது எவ்வித கசப்புணர்வும் இல்லை என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளித்தனர்.

Monday, 4 July 2011

ஆசிரியர் கவுன்சிலிங் முன்னுரிமை: "ஸ்பவுஸ்' கட்டுப்படுத்த திட்டம்

ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
 
ஆசிரியர் கவுன்சிலிங், பலருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  •  ராணுவத்தில் பணிபுரிவோரின் கணவன், மனைவி, 
  • கண்பார்வை இல்லாதவர், 
  • விதவை,
  • 40 வயதுவரை மணமாகாத முதிர்கன்னி,  
  • மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல் துணையுடன் நடக்கக் கூடிய மாற்றுத்திறனாளி, 
  • இதய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர், 
  • மனவளர்ச்சி, உடல்நலம் குன்றிய குழந்தையின் பெற்றோர் 
போன்றவற்றின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

மேலும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கணவர், மனைவி, தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் (ஸ்பவுஸ்) சான்றிதழ் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் சலுகை பெற முடியும். பலர் செல்வாக்கை பயன்படுத்தி, ஆண்டுதோறும் விரும்பிய பள்ளிகளுக்கு இச்சான்றிதழ் மூலம் இடமாறுதல் பெற்று வருகின்றனர். 


கடந்தாண்டு, பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் 2009(எண் 148) அரசாணையின்படி, மாறுதலுக்கான கட்டுப்பாடுகள் கையாளப்பட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. "ஸ்பவுஸ்' முன்னுரிமையை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற உள்ளன.

கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு


கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு
  • கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.நெல்லை கீழப்பாவூரை சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியன் தாக்கல் செய்த ரிட் மனு: நான் 1997ல் எம்.எட்., 1999ல் எம்.ஏ., முடித்தேன். என் கூடுதல் கல்வி தகுதிக்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2004ல் தணிக்கையின் போது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1997 முதல் 2000 ம் வரை வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்ய கல்வி துறையினர் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
  • மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ""போலி ஆவணங்கள், பொய் தகவல்களை தெரிவித்து ஊக்கத்தொகை பெற்றால், அதை ரத்து செய்யலாம். கூடுதல் கல்வி தகுதிக்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, ஆசிரியர்களது கல்வி தகுதியை மேலும் அதிகரிக்க செய்யும். மனுதாரர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கல்வி துறையினர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்..

எதிர்பார்ப்பு: 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக அந்தஸ்து

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக தங்களுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் 1-8ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். தொடர்ந்து அரசாணை 100ன்படி 6-8 வகுப்புகளுக்கு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை 2004ம் ஆண்டு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் 4 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 5 ஆண்டுகள் கழித்து இந்த ஆசிரியர்கள் 4,625 - 175 - 7,00 என்ற ஊதிய விகிதத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் இந்த ஆசிரியர்களை 5,500-175-9,000 என்ற ஊதிய விகிதத்தில் 1.6.2006 முதல் காலமுறை ஊதியத்தில் மாற்றி ஆணையிடப்பட்டது. இதனால் ஒரே பணி, இரு வேறு ஊதிய விகிதம் என்ற அவல நிலைக்கு 6,7 மற்றும் 8ம் வகுப்பு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தள்ளப்பட்டனர். 


கடந்த திமுக ஆட்சியில் ஏற்கனவே பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்ட பின்னர் இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். அவ்வாறு செய்யாததால் இடைநிலை ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாவும் புகார் தெரிவிக்கின்றனர். 


தொடக்க கல்வித் துறையில் 6,7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெறும் போது அதில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 1-5 வகுப்புகளுக்கு கீழிறக்கம் செய்ய வாய்ப்புண்டு. ஆனால் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இந்த வாய்ப்பு இல்லை. 


தமிழகத்தில் தற்போது உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களில் 75 சதவீதம் பேர் தமிழாசிரியர்கள் தகுதியுடனும், 20 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதியுடனும் உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது கல்வித் தகுதியை உயர்த்தி கொள்ளாதவர்கள். இவர்கள் பணியாற்றிய சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு குறுகிய கால பயிற்சி அளித்து முன் உதாரணங்கள் பலவற்றின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தலாம்.

மாணவர்களை அடித்தால் நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மாணவர்களை அடித்தால் நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
  • சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தீபக் என்ற மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் கண் பாதித்துள்ளதாக புகார் எழுந்தது. இது பற்றி மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.இதுபற்றி பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:​ மாணவர்களை அடித்து தண்டிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடிக்காமல் திருத்துவதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பள்ளி ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்களை முறைப்படுத்த வழி முறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் அதை பின்பற்றாமல் பிரம்பால் அடிப்பது, துன்புறுத்துவதை நியாயப்படுத்த இயலாது. மாணவர்களை அடித்து துன்புறுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
    தமிழ்நாடு பள்ளிக்கூட விதிகள் 51-வது பிரிவு மாணவர்களை அடிக்கின்ற உரிமையை கொடுக்கிறது. அந்த விதி 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீக்கப்பட்டு விட்டது. எனவே மாணவர்களை அடிக்கின்ற உரிமை ஆசிரியர்களுக்கு கிடையாது.
    இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., அரசு அறிவித்த 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கேள்விக்குறி !!!

தி.மு.க., அரசு அறிவித்த 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கேள்விக்குறி !!!

கடந்த, பிப்ரவரி 26ம் தேதி, கருணாநிதி, "965 தனியார் பள்ளிகளுக்கு அரசு மானிய உதவியுடன், 4,851 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், ஜூன் 1ம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும் என்றும், 1990-91 வரை துவங்கப்பட்ட, 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மை அல்லாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (அரசு உதவிபெறும் பள்ளிகள்), கூடுதலாக தேவைப்படும், 6,456 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்' என்றும் அறிவித்தார்.

இந்த இரு வகைகளிலும், 331 கோடி ரூபாய் செலவில், 11 ஆயிரத்து, 935 ஆசிரியர்களை நியமனம் செய்ய, முந்தைய அரசு அனுமதி அளித்தது. கருணாநிதி அறிவித்ததும், 965 தனியார் பள்ளிகளை அடையாளம் காணவும், 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கும் பணிகளும், பள்ளிக் கல்வித்துறையில் மின்னல் வேகத்தில் துவங்கின. ஆனால், அதற்குள் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், இப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு வகை ஆசிரியர் நியமனத்திற்கும் ஒவ்வொரு, "ரேட்' வைத்து பணம் வசூலித்த பிறகே, பணி நியமனம் நடக்கிறது. இந்த வகையில், 12 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்கள் மூலம், பல லட்சம் ரூபாய் கல்லா கட்டுவதற்கு, தனியார் பள்ளிகள் போட்டி போட்டன. நிதி உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலில் தங்களது பள்ளிகளை சேர்க்க, தனியார் பள்ளி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை எடுக்கத் துவங்கிய நிலையில், இத்திட்டம் அப்படியே நின்றுபோனது.

தற்போதைய நிலை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறும்போது, "முன்னாள் முதல்வர் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, அரசாணைகளும் வெளியிடப்பட்டன. ஆனால், தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டது. இன்று வரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. முந்தைய அரசு அறிவித்த இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை' என்றார். உதவிபெறும் பள்ளிகளில், தனியார் பள்ளிகளின் பெயரை சேர்ப்பதற்காகவும், ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்குவதற்காகவும், பல இடங்களில், "அட்வான்ஸ்' வேட்டை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், முந்தைய அரசின் அறிவிப்பு கைவிடப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் பணி நியமனம் மூலம், பெரும் தொகையை வசூலிக்க திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு, "செக்' வைத்துள்ளது.