- கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.நெல்லை கீழப்பாவூரை சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியன் தாக்கல் செய்த ரிட் மனு: நான் 1997ல் எம்.எட்., 1999ல் எம்.ஏ., முடித்தேன். என் கூடுதல் கல்வி தகுதிக்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2004ல் தணிக்கையின் போது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1997 முதல் 2000 ம் வரை வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்ய கல்வி துறையினர் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
- மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ""போலி ஆவணங்கள், பொய் தகவல்களை தெரிவித்து ஊக்கத்தொகை பெற்றால், அதை ரத்து செய்யலாம். கூடுதல் கல்வி தகுதிக்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, ஆசிரியர்களது கல்வி தகுதியை மேலும் அதிகரிக்க செய்யும். மனுதாரர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கல்வி துறையினர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்..
முடியும் என்றால் முயற்சி செய் ! முடியாது என்றால் பயிற்சி செய்!! தொடர்புக்கு:9003798003
popup.
Monday, 4 July 2011
கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment