முடியும் என்றால் முயற்சி செய் ! முடியாது என்றால் பயிற்சி செய்!!
தொடர்புக்கு:9003798003
welcome message
Hearty Welcomes You
Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003
Flash News
Flash News:
popup.
Monday, 3 September 2012
பொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;
குரூப்- II தேர்வு முறைகேடு
கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.
லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத்தி பலமுக்கிய ஆவணங்களை
கைப்பற்றியது. இந்த முறைக்கேட்டால் இளைஞர்கள் நம்பிக்கை இழந்தனர். இனிவரும்
காலங் களில் இதுபோன்ற முறைகேடுகளை அனுமதிக்காமல், டி.என்.பி.எஸ்.சி.
தேர்வுகளை சிறப்பாக நடத்த வேண்டு மென அதிமுக அரசு முடிவெடுத்தது. அதற்கு
திறமை வாய்ந்த ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியான ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ்.
நியமிக்கப்பட்டார்.
நட்ராஜ் காவல்துறையில் நேர்மையான அதிகாரியாக
திகழ்ந்தவர். சிறைத்துறை அதிகாரியாக இருந்தபோது பல சீர்திருத்தங்களை செய்து
தமிழக சிறைச்சாலை களில் இருக்கும் கைதிகளின் அன்பையும் மனித உரிமை
ஆர்வலர்களின் பாராட்டுதல்களையும் பெற்றவர். தமிழ் பற்றுக்கொண்டவர். இசைப்
பிரியர். சிறந்த கட்டுரையாளர். இளகிய மனம் படைத்தவர்.
மற்றொரு
அதிகாரியான டி.என்.பி.எஸ்.சி. செயலர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்மையான
அதிகாரி. முறைகேடுகளை செய்தது யாராக இருந்தாலும், துணி வுடன் நடவடிக்கை
எடுப்பவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். மிகவும் எளிமையானவர். இப்படி
இரண்டு நேர்மையான அதிகாரிகளும், முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்ட
உறுப்பினர்கள் மற்றும் மாறுதல் செய்யப்படாத தேர்வாணைய பணியாளர்களை கொண்டு
நேர்மையான முறையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டனர்.
இதுவரை இந்தியாவில் எந்த மாநில தேர்வாணையமும் செய்யாத மாற்றங்களை
கொண்டுவந்தனர். குறிப்பாக, தமிழக அரசு இணையதளத்தை காட்டிலும் மிகச் சிறந்த
டி.என்.பி.எஸ்.சி. இணையதளம், ஆன்லைன் விண்ணப்பம், நிரந்தர பதிவு எண், உடனடி
விடைகள் வெளியீடு, ஆண்டுத் திட்டம், போன்ற மிகச்சிறந்த நடைமுறைகளை
கொண்டுவந்தனர்.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதுபோல தேர்வு
முறைகேடுகளை அனுமதிக்காமல், மிகவும் பாதுகாப்பாக நூறு சதவிகிதம் நேர்மையாக
தேர்வுகளை நடத்தும் திட்டத்தை தயாரித்தனர். அவற்றில் முக்கியமாக,
1. கடந்த காலங்களில் வினாத்தாள்கள் அச்சாகி தேர்வாணையத்திற்கு
கொண்டுவரப்படும். அங்கிருந்து அனைத்தும் பண்டல் பண்டலாக மாவட்டங்களுக்கு
அனுப்பிவைக்கப்படும். அப்படி அனுப்பியபோது, 2010-ஆம் ஆண்டு சில
மாவட்டங்களில் பண்டல்கள் உடைக்கப்பட்டிருந்ததாக பிரச்சினை எழுந்தது.
தேர்வாணையத்திலும் வினாத்தாள்களை திருட வாய்ப்புள்ளது. எனவே இந்த
வினாத்தாள்கள் பாதுகாப்பாக தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என
தலைவர் நட்ராஜ் முடிவெடுத்தார். அதன்படி, அச்சகங்களிலிருந்து அச்சாகிவரும்
வினாத்தாள்கள், தேர்வாணையத்திற்கு வராமல் நேரடியாக மாவட்ட கருவூலங்களுக்கு
அனுப்பும் நடை முறை கொண்டுவரப்பட்டது. மாவட்ட கருவூலங்களி லிருந்து தேர்வு
மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்க பறக்கும்
படைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
2. மாவட்ட அளவில்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைக் கண்காணிக்க உயரதிகாரி இல்லாத நிலை முன்பு
இருந்தது. அந்த குறையைப் போக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் டி.என்.பி.எஸ்.சி.
தேர்வுக்கு மாவட்ட ஆட்சியரை முதன்மை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழக
அரசிடம் ஆணையை பெற்றது தேர்வு ஆணையம்.
3. தேர்வு எழுதியவர்கள்
எவ்வித குழப்பமடையாமல் இருக்க தேர்வு முடிந்த அடுத்த நாளே சரியான விடைகள்
தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு பல
கட்டுப்பாடுகளுடன் நேர்மையாக நடத்தப்பட்டது குரூப்- II தேர்வு. 3631
காலியிடங்களுக் கான இந்த தேர்வு ஆகஸ்ட் 12, ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 32
மாவட்டங்களில் 116 மையங்களில் 2645 தேர்வறைகளில் 6. 4 லட்சம் பேர் தேர்வை
எழுதினர். சிறப்பான முறையில் தேர்வை நடத்தியதாக தேர்வாணையம்
நிம்மதியிலிருந்தபோது வினாத்தாள் அவுட் ஆகிய செய்தி சேனல்களில் வெளியானது.
ஆண்டு கணக்கில் இரவு- பகலாக படித்து தேர்வு எழுதியவர்களும், நேர்மையான
தேர்வை நடத்த கடுமையாக உழைத்த தேர்வாணையத் தலைவரும், செயலரும்
வேதனையடைந்தனர்.
அடுத்த நாளே தேர்வாணையத்தின் அவசரக் கூட்டத்தைக்
கூட்டி குரூப்- II தேர்வை ரத்து செய் தனர் (ரத்து செய்யப்பட்ட குரூப்- II
தேர்வு நாள் விரைவில் நடக்கவுள்ள தேர்வாணையக் கூட்டத்தில் முடிவு
செய்யப்படும்). தேர்வாணையத்தின் வரலாற்றில் முறைகேடு நடந்த தேர்வை
நேர்மையாக ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இது தேர்வாணைய தலைவர்
மற்றும் செயலர் நேர்மைக்கு சிறந்த உதாரணம்.
சரி, குரூப்- II
தேர்வு முறைகேடு எப்படி நடந்தது என்பதை தேர்வாணையத்தில் விசாரித்ததில்
நமக்கு கிடைத்த தகவல்படி, பொதுவாக நான்கு இடங்களில் மட்டுமே வினாத்தாள்
அவுட் ஆக வாய்ப்புள்ளது. 1. வினாத்தாள் அச்சடிக்குமிடம், 2. தேர்வாணைய
அலுவலகம், 3. மாவட்ட கருவூலம், 4. தேர்வு மையம். இதில் தேர்வாணைய
அலுவலகத்திற்கும் வினாத்தாள் கொண்டுவரும் நடைமுறை மாற்றப்பட்டு, நேரடியாக
மாவட்ட கருவூலங்களுக்கு அனுப்பும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. மாவட்ட
ஆட்சியரை முதன்மை ஒருங்கிணைப்பாளராக நியமித்ததால் மாவட்ட கருவூலங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேர்வு மையங்களும் மூன்றடுக்கு பாதுகாப்பு
வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன. வினாத்தாள் அச்சடிக்கும் இடம் மட்டுமே
தமிழக காவல்துறை பாதுகாப்பில் இல்லாத ஒரே இடம். இப்போது அங்குதான்
வினாத்தாள் வெளியாகியுள்ளது என விசாரனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுவாக போட்டித்தேர்வு வினாத் தாள்களை அச்சடிக்கும் முறையில்
காலங்காலமாக ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது வட இந்திய
மாநிலங்களில் நடக்கும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தென்னிந்திய
மாநிலங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் நடக்கும்
தேர்வுகளின் வினாத்தாள்கள் வடஇந்திய மாநிலங்களில் அச்சடிக்கப்படுவது
வழக்கம்.
இந்த வினாத்தாள்களை அச்சடிக்கும் அச்சகங்கள் இந்திய மைய
வங்கியின் அங்கீகாரம் பெற்றவை. மத்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில்
உள்ளவை. வங்கிகளின் காசோலை, அரசுகளின் முக்கிய ஆவணங்கள், ஆகியவை இங்கு
அச்சடிக்கப் படுகிறது. அந்த வகையில் தமிழக அரசின் வழி காட்டுதலின் பேரில்
(கடந்த ஆண்டுகளில் வினாத் தாள்கள் அச்சடிக்கப்பட்ட அச்சகங்களை தேர்வாணையம்
மாற்றவில்லை என தற்போது தெரிய வருகிறது) கொல்கத்தாவில் இரண்டு
அச்சகங்களில், குரூப்- IV தேர்வு ஒரு அச்சகத்திலும், தற்போதைய குரூப்- II
வினாத்தாள் மற்றொரு அச்சகத்திலும் அச்சடிக்கப்பட்டன. இந்த இரண்டு
அச்சகங்களில்தான் தமிழக அரசு ஆவணங்கள், அரசு பணியாளர் தேர்வு களுக்கான
வினாத்தாள், போன்றவை அச்சடிக்கப் பட்டன. இதில் குரூப்- IV வினாத்தாள்
அச்சடிக்கப்பட்ட அச்சகம் மீது எந்த பிரச்சினையுமில்லை. குரூப்- II
வினாத்தாள் அச்சடித்த அச்சகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த
அடிப்படையில் வினாத்தாள் முறைகேட்டின் முக்கிய நபரான பாலன் என்கிற
ஸ்ரீதர்ராஜ் கைது செய்யப்பட்டார். இவரே குரூப்- II வினாத்தாள் வெளியாக
முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இவரது நண்பர்களான ஜெ.ஜெய் நிவாஸ்,
பி.சதீஷ்குமார், எம்.மோகன் பாபு, ஐ.செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூலம் ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் வினாத்தாள் முறைகேட்டில்
ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர். பாலன்
தரும் வாக்குமூலத்தின் மூலமே வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள்,
அவர்களுக்குள் உள்ள தொடர்பு வளையம் ஆகியவை தெரியவரும்.
மேலும்
அச்சகத்திலிருந்து வினாத்தாள் இரகசியமாக வினியோகம் செய்த ஏஜண்டு யார்,
இரகசியமாக இருந்த கொல்கத்தா அச்சகங்களின் விவரங்களை வெளியிட்ட அரசு அதிகாரி
யார், போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கும். அதுவரை விசாரணையின் போக்கை
பொருத்திருந்து பார்க்கலாம்.
இதை பற்றி நம்மிடம் பேசிய
தேர்வாணையத் தலைவர், ""வினாத்தாள் அவுட் ஆனது வருத்தமான விஷயம். சில சமூக
விரோதிகள் செய்த காரியத்தால், இரவு பகலாக படித்த பல்லாயிரக்கணக்கானவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை
பிடித்துக்கொடுத்த மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தேர்வுக்கு
படிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இது போன்ற முறைகேடுகளை நிச்சயம்
தடுக்க முடியும். படிப்பவர்கள் நம்பிக்கை இழப்பது வருந்ததக்கது. பொதுவாக
பல்வேறு வகை தேர்வுகளின்போதும் உண்மையிலேயே வினாத்தாள் அவுட் ஆகா
விட்டாலும்கூட, பல இடங்களில் அவுட் ஆகிவிட்டதாக ஒரு பேச்சுக் கிளம்பும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அப்படியொரு சந்தேகம் யாருக்கும் வரக்கூடாது
என்பதற்காகவே இந்த தேர்வை ரத்து செய்தோம். தனிமனித ஒழுக்கம் நமது
சமூகத்தில் மிகவும் குறைந்து வருகிறது. அதனால்தான் இப்படியெல்லாம்
நடக்கிறது. இந்த பிரச்சினயை சவாலாக எடுத்துக் கொள்வோம். அடுத்தடுத்த
தேர்வுகளை நேர்மையாக நடத்த இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்
படுத்திக்கொள்வோம். நியாயமான, நேர்மையான தேர்வை நிச்சயம் டி.என்.பி.எஸ்.சி
தொடர்ந்து நடத்திக் காட்டும் நீங்கள் இதை உறுதியாக
நம்பலாம்&ஹல்ர்ள்;&ஹல்ர்ள்; என்றார்.
அறிவியல்பூர்வமான தேர்வு முறை
வரும் காலங்களில் இது போன்ற தேர்வு முறைகேடுகள் நடக்காமல் இருக்க
தேர்வாணையம் புதிய திட்டங்களை பரிசீலனை செய்துவருகிறது. அதை பற்றி
தேர்வாணையத் தலைவர் கூறுகையில், ""இப்போது எங்கள் முன்பு இரண்டுகட்டப்
பணிகள் உள்ளன. ஒன்று, இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் புல்லுருவிகள்
மீது கடும் நடவடிக்கை எடுப்பது. இன்னொன்று, இதையே ஒரு சவாலாக எடுத்துக்
கொண்டு எதிர்காலத்தில் எந்த தவறுகளும் நடக்காமல் தடுப்பது என்பதுதான்.
அதற்கு இரண்டு திட்டங்களை வைத்துள்ளோம். ஒன்று, டி.என்.பி.எஸ்.சி.
தேர்வுகளை ஆன்லைன் தேர்வாக நடத்துவது&ஹல்ர்ள்;&ஹல்ர்ள்; என்றார்.
இது சாத்தியமா என நாம் கேட்டதற்கு, ""ஏன் சாத்தியமில்லை என
நினைக்கிறீர்கள். இன்று அனைத்திற்குமே தொழில்நுட்பம் வாய்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன்
தேர்வுகள் நடத்தமுடியும். வி.ஏ.ஒ., குரூப் -IV, போன்ற பெரிய தேர்வுகளுக்கு
தேர்வு மையத்தில் தேர்வு ஆரம்பிக்கும் சிறிது நேரத்தில் மையத்திலேயே
கேள்வித்தாள் பிரிண்ட்அவுட் எடுத்துக் கொடுத்து தேர்வை நடத்திவிடலாம்.
இப்படி செய்வதன் மூலம் இப்போது நடந்த முறைகேடுகளை தடுத்துவிட முடியும்.
வினாத்தாள்கள் அச்சடிக்கும் செலவு, போக்கு வரத்து செலவு, என அனைத்தையும்
கணக்கிட்டால். இது போன்ற தொழில்நுட்ப ரீதியான தேர்வுமுறை மிக சிறந்ததாக
இருக்கும். இப்போது ஒரு ஸ்கேனர் வந்துள்ளது, ஒரே நாளில் பல இலட்சக்கணக்கான
விடைத் தாள்களை மதிப்பீடு செய்து விடும். இன்று எல்லாவற்றிற்கும்
தொழில்நுட்பம் சாத்திய முள்ளது. அதனால் இனி டி.என்.பி.எஸ்.சி.
விஞ்ஞானபூர்வமாக தேர்வுகளை நடத்த தயாராகி வருகிறது. தேர்வு எழுதுபவர்களை
விஞ்ஞானப் பூர்வமாகவே அரசு பணி களுக்கு தேர்வு செய்வோம். அப்போதுதான் நமது
அரசாங்கத்திற்கு திறமைமிக்க பணியாளர்கள்
கிடைப்பார்கள்&ஹல்ர்ள்;&ஹல்ர்ள்; என்றார்
குரூப் - IV தேர்வு முடிவுகள்
பத்தாயிரம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற் காக, கடந்த ஜூலை 7-ஆம்
தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-IV தேர்வு முடிவினை வெளியிட
இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை
ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், முருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த
எம்.சின்னசாமி மற்றும் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக அரசின்
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 அரசு பணியிடங்களை
நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 27.4.2012 அன்று
குரூப்-IV தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில், இந்த
தேர்வுக்கு விண்ணப்பம் செய்தேன். தர்மபுரி மாவட்டம் பாப்பிநாயக்கனஹள்ளியில்
உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையம் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த
தேர்வு மையத்தில், 7. 7. 2012 அன்று எழுத்து தேர்வு எழுத சென்றேன். எனக்கு
வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 200 கேள்விகளில், 60-வது கேள்வி முதல் 153-வது
கேள்வி வரையிலான கேள்விகள் அச்சாகவில்லை. 200 கேள்விகளில், வெறும் 105
கேள்விகள் மட்டுமே அச்சாகி இருந்தது. 95 கேள்விகள் அச்சாகவில்லை.
இதனால் இந்த 95 கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலை எனக்கு
ஏற்பட்டது. இதுகுறித்து தேர்வு அறை மேற்பார்வையாளரிடம் புகார் செய்தேன்.
ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இந்த கேள்வித்தாள்
குறைபாடுகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு பல புகார் கடிதம்
அனுப்பினேன். மேலும், குரூப்-IV தேர்வு எனக்கு மட்டும் நடத்த வேண்டும்
என்றும், பல கோரிக்கை மனுவை 19.7.2012 அன்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளரிடம்
கொடுத்தேன். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. இதுவரை எந்த தகவலும்
தெரிவிக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி அச்சிட்ட கேள்வித்தாள்கள்
குறைபாடுகளுடன் இருந்ததால், வேலைபெறும் என்னுடைய உரிமை
பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குரூப்-IV தேர்வு குறித்து 27.4.2012 அன்று
வெளியிட்ட அறிவிப்பையும், 7.7.2012 அன்று நடந்த தேர்வையும் ரத்து செய்ய
வேண்டும். குரூப்-IV தேர்வை மீண்டும் நடத்த டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு
உத்தரவிட வேண்டும். 7.7.2012 அன்று நடந்த குரூப்-IV தேர்வின் முடிவினை
வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்&ஹல்ர்ள்; இவ்வாறு அதில் கூறப்பட்டு
இருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு
வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கே.பாலு ஆஜராகி வாதம்
செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 7.7.2012 அன்று நடந்த
குரூப்-IV தேர்வின் முடிவினை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த
மனுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என
உத்தரவிட்டார்.
நமக்கு கிடைத்த தகவல்படி, டி.என்.பி.எஸ்.சி.
செயலர் விரைவில் பதில் மனு தாக்கல் செய்வார். அதன்படி,
பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனால் இவ்வழக்கில் தேர்வாணையத்திற்கு சாதகமான தீர்ப்பு வர அதிகபட்ச
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் விரைவில் குரூப் லி IV தேர்வு
முடிகள் வெளியிடப்படும். நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
தேர்வுக்கான இடைவெளி
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகள் அறிவிப்பிலிருந்து கிட்டதட்ட 4
மாதங்கள் இடைவெளி இருந்தன. ஆனால் 2012 முதல் நடைபெற்ற தேர்வு களின்
அறிவிப்பிலிருந்து காலஇடைவெளி 2 மாதங்கள்தான் உள்ளன. உதாரணத்திற்கு குரூப்-
IV தேர்வுக்கான அறிவிப்பு 27.4.2012 வெளியானது, அதற்கான தேர்வு
7.7.2012-இல் நடைபெற்றது. குரூப் - II தேர்வுக்கான அறிவிப்பு 13.6.2012-இல்
வெளி யானது. இதற்கான தேர்வு 12.8.2012-இல் நடைபெற்றது.
இந்த கேள்வியை டி.என்.பி.எஸ்.சி. தலைவரிடம் கேட்டோம். ""நீங்கள்
சொல்கிறீர்கள் கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு அதிக கால
இடைவெளி கொடுத்தார்கள் என்று, அது தவறு. தேர்வை நடத்த ஏற்பட்ட
காலதாமதம்தான் அது. அறிவிப்பு வெளியிட தாமதம், தேர்வு நடத்த தாமதம்,
முடிவுகள் வெளியிட தாமதம், இன்டர்வியூ நடத்த தாமதம், இதனால் பணியில் சேர
தாமதம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? வாழ்க்கையில் முக்கியமான மூலதனம் எது
தெரியுமா? (நான் கல்வி என்று சொன்னேன்) நேரம்தான். மற்றது எல்லாம் திரும்ப
கிடைக்கும். முடிந்த நேரம் திரும்ப வராது. அப்படி இன்றைய இளைஞர்களின்
பொக்கிஷ மான நேரத்தை வீணாக்க விடமாட்டேன். ஒரே வருடத்தில் தேர்வு எழுதி,
இன்டர்வியூ முடித்து பணியில் சேர்ந்துவிடவேண்டும். அதையே நான்
விரும்புகிறேன். ஒரு வருடம் சிறப்பாக தயார் செய்தால் நிச்சயம் அரசு பணியில்
சேர்ந்துவிட முடியும். அப்படியில்லாமல் எனக்கு படிக்க கால அவகாசம் தேவை
என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் எப்படி தேர்வில் வெற்றி பெறுவார்கள்
அப்புறம் பணியில் சேர்ந்த பின்னர் வேலையை முடிக்க நேரமில்லை என்று வாழ்க்கை
முழுவதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்&ஹல்ர்ள்;&ஹல்ர்ள்; என்றார்.
கேள்விகள் மாற்றம் செய்யப்படும்
இந்தாண்டு நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக
கேட்கப்பட்டதாகவும், பொது தமிழ் கேள்விகள்கூட சற்று கடினமாக கேட்கப்பட்டதாக
வாசகர்கள் கவலைப்பட்டனர். ஆனால் வினாக்களை எப்போதுமே குறைக்கூறக்கூடாது.
காலத்திற்கு ஏற்ப வினாக்களும் மாற்றம் காணும். எந்த ஒரு தேர்வுக்கும்
வினாக்கள்தான் இலக்கு. வினாக்கள் எப்படி கேட்கப்படுகிறதோ, அதற்கு
ஏற்றார்போல தயார் செய்வதுதான் வெற்றியின் ரகசியம். முந்தைய ஆண்டுகளில்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு வினாக்கள்: நேரடியாகவும் எளிய முறைகளிலும்,
நினைவாற்றலை சோதிக்கும் முறையிலும் கேட்கப்பட்டன. 2012 லிருந்து
நடத்தப்பட்ட தேர்வுகளில் வினாக்கள், புரிதல் மற்றும் பகுத்தறிதல்
அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த திடீர் மாற்றத்தினால் சற்று
தேர்வு கடினமாக இருக்கலாம் தொடர்ந்து புதிய முறையில் தயார் செய்துவந்தால்,
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நீங்களும் வெற்றிப்பெறலாம்.
வினாக்கள் மாற்றத்தை பற்றி தேர்வாணையத் தலைவரிடம் கேட்டோம். அவர்
""தேர்வாணையம் அரசு பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்கிறது.
அப்படி தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும், அறிவுக்
கூர்மை உடையவராக, நேர்மையானவராக, தனிமனித ஒழுக்கமிக்கவராக, திறமைமிக்கவராக
இருக்க வேண்டும். அப்படிபட்டவர்களை தேர்வு செய்து அரசு பணியில்
சேர்க்கவேண்டும். அப்போதுதான் அரசு அமைப்பு நன்றாக இருக்கும். மக்களுக்கும்
சிறந்த சேவையை வழங்க முடியும். இதை கருத்திற்கொண்டு தேர்வாணையம் நடத்தும்
தேர்வுகள் அறிவியல்பூர்வமாக நடத்தப்படுகிறது. அரசு பணியாளர்கள்
மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளின் அடிப்படையில் தேர்வர்களின் பகுத்தாய்வு
திறனை ஆராயும் வகையில் தேர்வு முறை யில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அப்போதுதான் திறமைசாலிகளை கண்டறிய முடியும். அந்தவகையில் தான் மாற்றம்
செய்துள்ளோம் என்றார்.
அடுத்த ஆண்டுத் திட்டம்
இந்தியாவில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மற்றும் பணியாளர்
தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) அடுத்து இந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தான்
முதன்முறையாக ஆண்டுத்திட்டம் -2011-2012 வெளியிடப்பட்டது, அதில் ஒரு வருடம்
முழுக்க எந்தெந்த தேர்வுகள் நடக்கின்றன. அவற்றின் முடிவுகள் எப்போது
வெளியிடப்படும் என்பது முன் கூட்டியே வெளியிடப்பட்டது. இது தேர்வு பற்றிய
வெளிப்படையான நிர்வாகம் அமைந்துள்ளதற்கான அடித்தளம். கடந்த மாதங்களில்
முடிந்தவரை இந்த ஆண்டுத் திட்டத்தை பின்பற்றியே தேர்வுகள் நடத்தப் பட்டன.
தேர்வாணையத் தலைவர் அடுத்த ஆண்டுத் திட்டம் 2013 ஜனவரி மாதத்தில்
வெளியிடப்படும் என்றார்.
முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின்மீது நடவடிக்கை
சென்ற ஆண்டில் முன்னாள் தேர்வாணையைத் தலைவர் செல்லமுத்து உட்பட 11
தேர்வாணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், பல்வேறுவகையில் முறைகேடுகளில்
ஈடுப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீது உச்சநீதி மன்றத்தில் இடைகாலத் தடை பெற்றுள்ளனர். இந்த
வழக்கின் நிலை பற்றி தேர்வாணையத் தலைவரிடம் நாம் கேட்டபோது, இந்த வழக்கு
நீதிமன்றத்தில் இருப்பதால் அதை பற்றி பேச விரும்பவில்லை என்றார்.
2011 குரூப்- II தேர்வு ரத்தாகுமா?
2011- இல் நடைபெற்ற குரூப்- II தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு,
நேர்காணல் நடந்துமுடிந்து, இறுதி முடிவுகளும் அறிவிக்கபட்டுவிட்டன. இனி பணி
யிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியில் அமர்வதுதான் பாக்கி. மேலும்
காலதாமதமாவதால் வெற்றிப்பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர். பயப்படத்
தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் தமிழக அரசுக்கு
அனுப்பியாகிவிட்டது. அரசின் பதிலை தேர்வாணையம் எதிர்பார்த்துள்ளது
அவ்வளவுதான். இந்த குரூப்- II 2011 தேர்வு ரத்தாகாது. மேலும், இந்த குரூப்-
II தேர்வு வினாத்தாள் முறைகேட்டில் முக்கிய நபராக மாட்டியுள்ள பாலன், 2011
குரூப்- II தேர்வில் மாநில அளவில் ஐந்தாமிடம் பெற்றுள்ளதால் இந்த
தேர்விலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என நம்பப்படுவது
உண்மைத்தான். அந்த கோணத்தில் பாலன் தயவில் கடந்த தேர்வில் வெற்றிப்பெற்றவர்
களை பற்றி தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த
காரணத்திற்காக 2011 குரூப்- II தேர்வு ரத்து செய்யப்படாது. ஏனெனில்,
நேர்மையாக தேர்வெழுதி வெற்றிப்பெற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில்
தலைவர் உறுதியாக உள்ளார். அதிகரிக்கப்படும் பணியிடங்கள்
கடந்தக்கால வி.ஏ.ஓ., குரூப்-II தேர்வு அறிவிப்பில் காலியிடங்கள் குறைந்து
வருகின்றது. ஆனால் தற்போதைய நிலையில் தமிழக அரசு பணிகளில் லட்சக்கணக்கான
காலியிடங்கள் உள்ளன. இவற்றை அரசின் ஆவணங்களும், அரசு ஊழியர் சங்கங்கள்
மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் போன்றவை உறுதிச் செய்கின்றன. ஆகையால்
அதிகளவிலான பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுமா? என தலைவரிடம்
கேட்டோம். அவர், ""டி.என்.பி.எஸ்.சி. முதல் அறிவிப்பு தரும்போது குறைந்த
அளவிலான காலியிடங்கள் தரப்பட்டன. இன்னும் அதிகளவில் காலியிடங்கள் வேண்டுமென
வற்புறுத்திக் கேட்டு 10,718 காலியிடங்களை பெற்றோம். அதனால் இன்னும்
தொடர்ந்து அதிகளவிலான காலியிடங்களை பெற்று அதிக பணியிடங்களை உருவாக்கித்தர
வேண்டுமென ஆசைப்படுகிறேன். அது இந்த அரசில் நடக்கும். இளைஞர்களின்
எதிர்காலமும் அரசு துறையும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எனது
குறிக்கோள்&ஹல்ர்ள்;&ஹல்ர்ள்; என்றார்.
இறுதியாக, தேர்வாணையத் தலைவர் தனது கட்டுரை ஒன்றில் கூறியதுபோல,
நமது அமைப்பில் சட்டங்களையும், விதிகளையும் நடைமுறைப் படுத்துவதில்தான் சிக்கல் உள்ளது. பாரபட்சம் பார்க்கக்கூடாது.
பொதுமக்களும் அவரவர் நிலையில் ஊழலை ஒழிக்கவும் ஊழலுக்கு துணை போகமாட்டோம்
என்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். நியாயமாக கிடைப் பதற்கு லஞ்சம் கொடுக்கக்
கூடாது. கேள்விக் கேட்க தயங்கக்கூடாது. உயிர், உடமைகள் பாதுகாப்பு,
சுதந்திரம், சமத்துவம் கண்ணியம்- இவை அடிப்படை உரிமைகள். எந்த விதத்திலும்
தனிமனித அவமதிப்பை தாங்கிக்கொள்ளக்கூடாது. சுயமரியாதைப்பற்றியும்,
பகுத்தறியும் முறையை மேடையில் முழங்குபவர்கள் வாய்ச்சொல் வீரர்கள், ஆனால்
உண்மையான சுய மரியாதை ஊழலுக்குத்துணை போகாத எண்ணம், சொல், செயல், லஞ்சம்
பெறுவதும், லஞ்சம் கொடுப்பதும் மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல் என்ற
அளவில் தீயது விட்டில் என்ற ஒழுக்கமான வாழ்க்கையே உண்மையான சுயமரியாதை.
No comments:
Post a Comment