புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கை : கடந்த 2010
ஆக. 24ம் தேதி கல்வித் துறை இயக்குனர் ஆணையின் அடிப்படையில் ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களுக்கு 220 நாட்கள் பள்ளி நாட்களாக அறிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு
200 வேலை நாட்கள் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இச்
சட்டத்திற்குப் புறம்பாக கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணை,
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் அவசர செயற்குழு
கூட்டம் சங்க தலைவர் விஜயன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஆரம்பப்
பள்ளி ஆசிரியர்களுக்கு 220 வேலை நாட்கள் அமலாக்கினால்,
தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது போல் 20 நாட்கள் ஈட்டிய விடுப்பு
(இ.எல்.,) வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 200 வேலை நாட்களாக அமலாக்க
வேண்டும்.
மாற்றல் கொள்கை அடிப்படையில் கிராமப் பள்ளி
ஆசிரியர்களுக்கு உடனே மாற்றல் உத்தரவு வெளியிட வேண்டும். பி.எஸ்.டி.,
ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் (டி.ஜி.டி) பணி
இடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏசிபி-யை உடனே வழங்க வேண்டும் உட்பட
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு கல்வித்துறை
முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment