welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday, 25 August 2012

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு எப்போது?


டி.இ.டி. தேர்வு முடிவு தயாராக உள்ள போதும், வருமா, வராதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தேர்வில் போதிய அளவு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேர்ச்சி விகிதத்தை குறைப்பது பற்றி டி.இ.டி. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தேர்வு முடிவுகள் தாமதமாவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5.50 லட்சம் பேர் எழுதினர். தமிழக அரசு, முதல் முறையாக நடத்திய இத்தேர்வு கேள்வித்தாள் அமைந்த விதம், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, 3 மணி நேரம்; 150 மதிப்பெண்கள், டி.இ.டி., தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம்; 150 மதிப்பெண்கள் என, இரு தேர்வுக்கும் மிகப்பெரிய முரண்பாடு; யாருமே சிந்தித்துப் பார்க்காத வகையில் அமைந்த கேள்விகள் என, அடுக்கடுக்காக பல்வேறு குமுறல்களை, தேர்வர் வெளிப்படுத்தினர்.
தேர்வர் மத்தியில் இருந்து, இதுவரை எதிர்பார்த்திராத அளவுக்கு, கடும் விமர்சனங்களை, டி.ஆர்.பி., எதிர்கொண்டது. 10 சதவீத தேர்ச்சியை எதிர்பார்த்த நிலையில், 2 சதவீதமாக தேர்ச்சி முடிவு சரிந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25,000 பேரை தேர்வு செய்ய, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி., உள்ளது. ஆனால், பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் பார்த்தால் கூட, 10 ஆயிரம் பேர் மட்டுமே தேறுவர் என, கூறப்படுகிறது.

தேர்வு முடிவைப் பற்றி, வெளிப்படையாக கருத்துக் கூற, டி.ஆர்.பி., மறுத்து வருகிறது. தேர்வு முடிவு தயாராகி விட்டது; எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம் என்று மட்டும், திரும்பத் திரும்ப கூறி வருகிறது.
உண்மையான தேர்ச்சி என்னவோ, அதை வெளியிட வேண்டும் என்பது தான், தேர்வரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூடுதலாக தேவைப்படும் ஆசிரியரை, அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேர்வர் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டால், அது அரசியல் ரீதியாகவும், பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திவிடுமோ என, டி.ஆர்.பி., பயப்படுவது தான், முடிவு வெளியாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments: