பாரதியார் பல்கலை சார்பில், விரிவுரையாளர், உதவி பேராசிரியர்களுக்கு நடத்தப்படும், மாநில தகுதித் தேர்வான, "செட்' தேர்வு வரும், அக்., 7ம் தேதி நடக்கிறது.இதற்காக, பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலை மானியக் குழு அனுமதியோடு, உதவி பேராசிரியர், விரிவுரையாளருக்கான மாநில தகுதித் தேர்வை, பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இத்தேர்வை, அக்., 7ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 முதன்மைத் தேர்வு மையங்கள் வழியாக, 53 தேர்வு மையங்களில் நடத்த உள்ளது. பல்கலை மானியக் குழு அனுமதியுள்ள, 27 பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடக்கின்றன.மூன்று தாள்கள் கொண்ட இத்தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாள்கள், அக்., 7ம் தேதி காலை, 9.30 முதல், 12 மணி வரையும், மூன்றாம் தாள் மதியம், 1.30 முதல், 4 மணி வரையும் நடக்கின்றன. பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, தேவையான விண்ணப்ப நகல், தேர்வு வருகை பற்றிய தாள், தேர்வு அனுமதிச் சீட்டு, தேர்வுக் கட்டணம் செலுத்திய, "சலான்' மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் போன்றவற்றை இணைத்து, செயலர், விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு -2012, பாரதியார் பல்கலை, கோவை - 641046 என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தின் மீது, "விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு- 2012' என்று அவசியம் குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 7ம் தேதி மாலைக்குள், பல்கலை வந்து சேர வேண்டும். இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, ஆக., 31ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்டு, இணைப்புகளோடு நகல்களை, பல்கலைக்கு, செப்., 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விவரங்களை பல்கலை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment