welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday 6 March 2012

தொடக்கக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் மதிய உணவு இடைவெளியின் போது கண்காணித்தல் - இயக்குனர் அறிவுரை.

*தொடக்ககல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 4539 / J3 / 2012, நாள். 24.2.2012.
*காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளில் மாணவ / மாணவியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*எக்காரணம் கொண்டும் மாணவ / மாணவியர்கள் பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
*பள்ளி இடைவேளை மற்றும் உணவு இடைவேளையின் நேரங்களில் தினந்தோறும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு ஆசிரியரை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்.
*பள்ளிவளாகத்தில் ஏதேனும் பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் கிணறுகள் இருந்தால் அதனை பற்றி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் தெரிவித்து அதனை மூடுவதற்கும் , அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க இருப்பதற்கும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என  அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.