welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Sunday 4 March 2012

ஆங்கில வழிக் கல்வியில் சேரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு


            நாட்டில், ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, முதன்முறையாக 2 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 2003-04 ஆண்டு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த 2010-11 ஆண்டின் எண்ணிக்கையானது 274% அதிகம். இந்தியாவில், இந்தி வழிக் கல்விக்கு அடுத்து, ஆங்கில வழிக் கல்வியே அதிகக் குழந்தைகளால் கற்கப்படுகிறது. வங்காளம் மற்றும் மராத்திய மொழிகளை இது பின்னுக்கு தள்ளிவிட்டது. கல்வி, திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகம்(National university of Education, planning and Administration - NUEPA) என்ற அமைப்பின், கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு(District information system for Education - DISE) மேற்கொண்ட, நாடு தழுவிய பள்ளி சேர்க்கை ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதேசமயம், இந்த ஆய்வறிக்கை இனிமேல்தான் வெளியிடப்படும்.

இந்தி, பெங்காலி, மராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி வழிக் கல்வியில் நடைபெறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2010-11 ம் ஆண்டு கணக்கெடுப்பில் அதிகரித்திருந்தாலும், ஆங்கில வழிக் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அனைத்தையும்விட அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், ஆங்கிலத்திற்கு இருக்கும் தேவை காரணமாக, மாநில அரசுகள், இந்த விஷயத்தை யாரும் கற்பனை செய்ய முடியாத விதத்தில், எதேச்சதிகாரமாக, கையாள்வதாக கல்வியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் நம்புகின்றனர்.
உலகின் சிறந்த ஆராய்ச்சிகள் சொல்வது என்னவென்றால், ஒரு குழந்தையின் சிந்தனைத் திறன் சிறப்பாக மேம்பட, தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதே. பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களே தவிர, அவர்களை கட்டாயம் ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்த்துவிட வேண்டும் என்று நினைப்பதில்லை. மாநில மொழிப் பள்ளிகள், ஆங்கில மொழியையும் சிறப்பாக கற்பித்தால், ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு இருக்காது என்று பல கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு மொழி வழியில் ஒரு குழந்தை பல ஆண்டுகள் படித்தாலும், அம்மொழியை சிறப்பாக பேசவோ, எழுதவோ அந்தக் குழந்தை திறமைப் பெற்றுவிடுவதில்லை என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு குழந்தை முதல் மொழியில்(Mother tongue or first language) சிறப்பு தேர்ச்சி பெற்றால், அது ஆங்கிலம் போன்ற இரண்டாவது மொழியை விரைவாக கற்றுக்கொள்ளும் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாடப்புத்தகங்கள் எந்த மொழியில் இருக்கிறது என்பது பெரிய முக்கியமல்ல என்பதே அவற்றின் கருத்து.
மேலும், நாட்டிலுள்ள ஏராளமான பள்ளிகள் தங்களை ஆங்கில மீடியம் பள்ளிகள் என்று அழைத்துக் கொண்டாலும், அவை சிறப்பான ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே, தேசியளவில் ஒரு தெளிவான மற்றும் விரிவான மொழிக் கொள்கை தேவை. அப்போதுதான், மாநில அரசுகள் ஆங்கில வழிக் கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளை தடுக்க முடியும் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆங்கில வழிக் கல்வியானது தங்களது குழந்தையின் வாழ்வை மேம்படுத்தும் என்று நம்பும் பெற்றோர்களின் எண்ணிக்கை இந்தியளவில் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கு காரணம் என்றும், அதேசமயம், தரமான கல்வி என்ற முக்கிய அம்சத்தைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை என்றும் அந்தக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.