welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Thursday, 19 January 2012

மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடை, இலவச காலணி, புத்தகப்பை, பென்சில்கள் வழங்க முதல்வர் உத்தரவு


பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும், தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பான வசதிகள் நிறைந்த சூழ்நிலைகளில் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

இதன் அடிப்படையில், 2012-13ம் ஆண்டில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்பள்ளிகள் ஆகியவற்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு சீருடைகளுடன் கூடுதலாக இரண்டு சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 4 சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு பாவாடை தாவணிக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகள் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 078 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

மேலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா ஒரு காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35 ஆயிரத்து 556 மாணவ, மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 9 முதல் 10ம் வகுப்பு படிக்கும் 18 லட்சத்து 5 ஆயிரத்து 933 மாணவ மாணவியருக்கு 142 ரூபாய் செல்வில் ஒரு காலணியும் வழங்கவும், அதனை இந்த ஆண்டே வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 94 ‌கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான ஜாமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத கலர் பென்சில்கள் மற்றும் புவியியல்படங்களை இந்த கல்வியாண்டு முதல் 2012-13 முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும் வழங்கப்படும். இதன் மூலம் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர்களும் பயன்பெறுவர். இதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 35 ரூபாய் மதிப்புள்ள ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை இரண்டாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து 6,8,10 வகுப்பு மாணவ மாணவியருக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஓர் ஆயிரத்து 572 மாணவ மாணவிகள் பயன்பெறுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 20 ரூபாய் மதிப்புடைய கலர்பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதன் மூலம் 46, 01,572 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 12-13ம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்ச ரூபாய் செலவு ஏற்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபு வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் வழங்கப்படும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும, 3ம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரத்து ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 18 January 2012

1,155 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் இழுத்தடிப்பிற்குக் காரணம்




                  இழுத்தடிப்பு ஏன்?தொடக்க கல்வித் துறைக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பெற்ற 1,155 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதில், ஒன்பது மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது.இவர்களில், 750 பேருக்கு மட்டுமே காலிப் பணியிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் விவகாரம், இடியாப்ப சிக்கலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

                 நியமன ஆலோசனை:மே 31ம் தேதி, கணிசமான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர் என்பதால், அதன் பின் புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாமா என, துறை முதலில் ஆலோசித்தது.
ஆனால், ஐந்து மாதங்கள் வரை பணியிடம் வழங்காவிட்டால், பிரச்னை மேலும் பெரிதாகும் என்பதால், தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில், பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடங்களில், இடைநிலை ஆசிரியர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்கு (1 முதல் 5 வரை) மாற்றிவிட்டு, அந்த இடங்களில், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, துறை ஆலோசித்து வருகிறது.

                 இது குறித்து, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று நடைபெறும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், பணியிடங்களை இறுதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

                  பொங்கலுக்குள் நல்ல செய்தி:தொடக்க கல்வி இயக்குனர் சங்கரிடம், இந்தப் பிரச்னை குறித்து கேட்ட போது, ""புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள இடங்களை கண்டறிந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம், உரிய புள்ளி விவரங்களைப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில், பொங்கலுக்குள் புதிய ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படும்,'' என்றார்.- ஏ.சங்கரன் -

Monday, 9 January 2012

தகுதி தேர்வா? நேரடி தேர்வா? முடிவெடுக்கிறது தமிழக அரசு

நடப்பு கல்வியாண்டில், 24 ஆயிரத்து, 17 ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வை முதலில் நடத்துவதா அல்லது பிரதான போட்டித் தேர்வை நடத்துவதா என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரத்தில், ஓரிரு நாளில் முடிவெடுத்து, தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

திணறும் டி.ஆர்.பி.,:நடப்பாண்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ், 24 ஆயிரத்து, 17 ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனினும், ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், இதுவரை எவ்வித முடிவையும், ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கவில்லை.எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களை, தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என, கட்டாயக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என, இரு வகையான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இடைநிலை ஆசிரியர் நியமன விவகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனங்கள் இருக்கும் என, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துவிட்டது.ஆனால், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் நியமனம், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

எது முதலில்?இவர்களுக்கு தகுதித் தேர்வை நடத்தி, அதன்பின் பிரதான போட்டித் தேர்வை நடத்தி முடிவை வெளியிட வேண்டுமெனில், அடுத்த கல்வியாண்டில் பாதி கரைந்துவிடும். எனவே, என்ன செய்வது எனத் தெரியாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் முழித்து வருகிறது.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர், "முதலில், பிரதான போட்டித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து விடுவோம்; அதன் பின், பொறுமையாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவோம்' என, ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, எழுத்துப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அதிகாரிகளுடன் ஆலோசனைஇந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளுடன், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று ஆலோசனை நடத்தியது. பிப்ரவரியில், தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு, மே மாதம் தேர்வை நடத்துவது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக, அரசின் கருத்தைக் கேட்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கு, ஓரிரு நாளில் முடிவெடுத்து, தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு அறிவிக்க உள்ளது. இதன் பின், புதிய ஆசிரியர் நியமனப் பணிகள் துவங்கும்.

Friday, 6 January 2012

ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளது உறுதி



     ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு (2011-12) மொத்தம் 24 ஆயிரத்து 17 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில்  பணிகள் அனைத்தும் நிறைவடையும் எனவட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் எவ்வளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசின் உத்தரவின் மூலம் மொத்தம் 24, 017 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

Expected DA for central Govt.Employees from Jan 2012


           Perhaps it is very early to calculate the status of additional Dearness  allowance from January, 2012 for Central Government employees and  Pensioners, before releasing the AICPIN for the balance of three months  i.e.October, November and December. Enquiries are being poured as comments  and received emails to our inbox about the expected DA from Jan, 2012. We  can assume that the AICPIN will certainly go up, because of the essential  commodities prices are going high with non stop. Anyway we can assume the  additional Dearness allowance from January 2012 will be minimum 7%. The  existing Dearness allowance is 58%, it will become as 58% + 7% = 65%.

 

Wednesday, 4 January 2012

இனி 1 முதல் 6-ம் வகுப்பு வரை ஒரே ஒரு பாடப்புத்தகம்!

சென்னை:
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வி செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கீடும்போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.

*1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

*7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தை தொகுதி 1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலை தொகுதி-2 எனவும், ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்கள் வெளியிடப்படும். தமிழ்வழி, ஆங்கில வழி ஆகிய 2 வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

*சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாடநூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாக பிரிக்கப்படாமல் வருடத்துக்கு ஒரு புத்தகமாக, இப்போது நடை முறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும். 9, 10 வகுப்புகளுக்கு முப் பருவமுறை 2012-13-ல் நடை முறைப்படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையை பின்பற்றி பாடநூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நிதி துறை

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை, 2012 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பள்ளிக்கல்வித்துறை

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தொடக்க நிலை பள்ளிகளின் வேலை நேரம் நீட்டிப்பு

சென்னை :
                  தமிழகம் முழுவதும், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் வேலை நேரம், அரை மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாலை 4:10 மணிக்கு முடிய வேண்டிய பள்ளிகள், நேற்றில் இருந்து மாலை 4:40 வரை இயங்கத் துவங்கின. சமச்சீர் கல்வி பிரச்னையால் எழுந்த தொடர் சிக்கல்களால், பள்ளி வேலை நேரத்தை சரிகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்க, உத்தரவு உள்ளது. தற்போது, தொடக்க கல்வி இயக்ககம், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரத்தை, அரை மணி நேரம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. துறையின் இந்த நடவடிக்கைக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Sunday, 1 January 2012

பொங்கல் பண்டிகை மிகை ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு

6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

சென்னை: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ. 10 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டள்ளதாவது,

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படி, நடப்பு கல்வியாண்டில் (2011-12) அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும். இதுமட்டுமல்லாமல், அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை. சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு,அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.