welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Thursday 27 October 2011

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை


"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை,' என்ற, தமிழக அரசின் உத்தரவு, முதன் முறையாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் நியமனத்தில் அமலுக்கு வருகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு மூலம், தொடக்க கல்வித்துறைக்காக, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.நவ., 4 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜன., 8ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. மொத்தம் உள்ள 34 பணியிடங்களில், ஏழு பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, முதன் முறையாக ஒதுக்க உள்ளது.
முன்னுரிமை அளிக்காதது ஏன்?இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த அரசாணை வெளியானதற்குப் பின், பல்வேறு பணி நியமனங்கள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும், அரசாணை தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் என்பதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
முதன் முறையாக, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது. தலா ஏழு இடங்கள், இவர்களுக்கு கிடைக்கும்.கல்வி அதிகாரிகள் பணியிடத்தை பொறுத்தவரை, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., ஆகிய இரு படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்படுவர். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு, இதேபோன்ற விதிமுறைகள் பொருந்தும். தமிழ் வழியில் தகுதியானவர்கள் இல்லாதபட்சத்தில், அடுத்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் அறிவிப்பு :முந்தைய தி.மு.க., அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. அப்போது, தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும், இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும், "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதற்கான அரசாணை, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.

இரண்டே பேர் நியமனம்இதன்பின், தமிழ் வழியில் படித்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், "ஜெராக்ஸ் ஆபரேட்டர்' ஒருவரும், தலைமைச்செயலகத்தில், "லிப்ட் ஆபரேட்டர்' ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.முக்கிய பதவிகளுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, முதன் முறையாக கல்வி அலுவலர்கள் நியமனத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதேபோல், டி.என்.பி.எஸ்.சி., இனிமேல் தேர்வு செய்யவுள்ள பணிகளிலும், இந்த அரசாணை அமலுக்கு வரும்.

தெளிவான விதிமுறைகள் இல்லை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை தொடர்பாக, முந்தைய அரசு தெளிவான வழிகாட்டுதல்களையோ, விதிமுறைகளையோ வெளியிடவில்லை. இதனால், அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்புகளிடம், ஒருவித குழப்பம் தொடர்ந்து இருக்கிறது.
"பள்ளிப்படிப்பு முதல், பணிக்குரிய கல்வித்தகுதி வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, முந்தைய அரசு தெரிவித்தது.

தற்போது, கல்வி அலுவலர் நியமனத்தில், இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்கின்றனர். பள்ளிப்படிப்பு குறித்து, எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. எனவே, தற்போதைய அரசு தெளிவான விதிமுறைகளை வகுத்து அறிவித்தால் தான், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.- ஏ.சங்கரன் -

No comments: