welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Thursday, 27 October 2011

போட்டித் தேர்வு மூலம் 34 ஏ.இ.இ.ஓ., விரிவுரையாளர்கள் விரைவில் தேர்வு


                              உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களாக, தலா 34 பேரை, போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகிறது. இதற்கான விண்ணப்பங்கள், நவ., 2 முதல் 19ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கிடைக்கும்.தொடக்க கல்வித் துறையில் உள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,) பணியிடம், மிகவும் முக்கியமானது. ஒரு மாவட்டம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பு, இந்த அலுவலர்களிடம் உள்ளது.
இங்கு ஏற்படும் காலிப் பணியிடங்கள், 70 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 30 சதவீதம் நேரடி போட்டித் தேர்வு மூலமும் நிரப்பப்படுகிறது. அதன்படி, 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அல்லது நாளை வெளியிட உள்ளது.

முதுநிலை விரிவுரையாளர்
இதேபோல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள, 34 முதுநிலை விரிவுரையாளர்களை நிரப்பவும், ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்த உள்ளது. இதுகுறித்த அறிவிப்பும், ஏ.இ.இ.ஓ., தேர்வுடன் சேர்த்து அறிவிக்கப்பட உள்ளது.
தேர்வெழுத தகுதி
உதவி தொடக்க கல்வி அலுவலர் - பி.எட்.,
முதுநிலை விரிவுரையாளர் - முதுகலை பட்டப்படிப்புடன், எம்.எட்.,

ஏ.இ.இ.ஓ., கவுன்சிலிங் எப்போது?
இதற்கிடையே, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை இன்னும் நடத்தாமல் இருப்பது, ஆசிரியர்களிடையே சலசலப்பை எழுப்பியுள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தொடக்க கல்வித் துறை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""அனைத்து வகையான, "கவுன்சிலிங்'கையும் இந்நேரம் முடித்திருக்க வேண்டும். ஆனால், ஏ.இ.இ.ஓ., பதவி உயர்வு கவுன்சிலிங் மட்டும் இதுவரை நடத்தாமல், உள்ளாட்சித் தேர்தல் காரணத்தைக் காட்டி, நிறுத்தி வைத்திருந்தனர்,'' என்றார்.
மேலும், ""அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருப்பவர்களில், பணி சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். வெளிப்படையான முறையிலும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமலும் பதவி உயர்வு வழங்க, துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments: