welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday, 29 January 2013

ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும், 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி, அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. 

ஆனால், மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த பணி நியமனம், ஆர்.டி.இ., சட்டத்திற்கு எதிரானது என்பதால், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய, கல்வித்துறைக்கு, அரசு உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதன் அடிப்படையில், முதல்கட்டமாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்ய, துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

பணி நீக்க உத்தரவு கடிதங்கள், நேற்று வழங்க இருந்த நிலையில், பிரச்னை குறித்த முழு விவரங்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, பணி நீக்க உத்தரவு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். 

இந்த பிரச்னை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின், ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என, சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.  இதை, அதிகாரிகள் செய்யவில்லை.
மேலும், ஆசிரியர் நியமனங்களுக்கு, அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி, ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு, அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில், திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: