welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Friday, 28 December 2012

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில் ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு


CLICK HERE- VAO-Counselling Schedule & Date-Wise vacancy position

மதிப்பெண் அறிய இங்கே சொடுக்கவும்

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர,
30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்டம்பர், 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவம்பர், 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123, கடலூரில் 88, கிருஷ்ணகிரியில் 73, திருவள்ளூரில் 100, திருவண்ணாமலையில் 115, வேலூரில் 112, விழுப்புரத்தில் 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.

No comments: