welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Sunday, 11 November 2012

தீபாவளியன்று திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்



திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து அக்கோவிலின் இணை ஆணையர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கந்த சஷ்டி தொடங்கும் முதல் நாளான நவம்பர் 13ம் தேதி மற்றும் சூரசம்ஹாரம் நடக்கும் 18ம் தேதி ஆகிய இரு தினங்களில் திருக்கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும்.
அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு அருள்மிகு ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாரதனையும் நடைபெறும்.
சூரசம்ஹாரம் அன்று மாலை 4.20 மணியளவில் சுவாமி எழுந்தருளி மாலை 5.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவின் 2ம் நாள் முதல் 5ம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
நவம்பர் 19ம் தேதி அன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் வைத்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments: