கலெக்டர் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:
ஓணம் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்று விடுமுறை விடப்படுகிறது.இந்த உள்ளூர் விடு
முறைக்கு பதிலாக அடுத்த மாதம் 8ம் தேதி அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது
.விடுமுறை அறிவிக்கப்பட்ட 29ம் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகை யில், குறிப்பிட்ட அளவு ஊழியர்களோடு செயல்
படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.