ஊதிய
முரண்பாடு குறித்த குறைதீர்க்கும் பிரிவின் விசாரணைக்கு ஆஜராக விருப்பம்
உள்ளவர்கள் மே 4 ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்
என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து
அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதித்துறை செயலர்
(செலவினம்) எஸ். கிருஷ்ணனை தலைவராகவும், கூடுதல் செயலர் ம. பத்மநாபன்,
இணைச் செயலர் பி. உமாநாத் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு ஊதிய
குறைதீர்க்கும் பிரிவை அரசு நியமித்து கடந்த ஆண்டு ஆணையிட்டது.
இந்த
உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரசு அலுவலர் சங்கங்கள் மற்றும்
தனிநபர்களிடம் உரிய மனுக்களைப் பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகளை
களைவது குறித்து அரசுக்கு 3 மாத காலத்திற்குள் பரிந்துரை அறிக்கை அளிக்க
ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி,
ஊதிய குறைதீர்க்கும் பிரிவானது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள்
மற்றும் அரசு சங்கங்களுடன் உயர்நீதிமன்ற ஆணையின்படி நேரடியாக விசாரணை
நடத்தும். இந்த விசாரணையில் ஆஜராக விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சங்கங்கள்
தங்களின் கோரிக்கைகளை ஊதிய குறைதீர்க்கும் பிரிவுக்கு அனுப்பி வைத்து பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
கோரிக்கைகளை அரசு துணைச் செயலர் நீதி (ஊதியப் பிரிவு), சென்னை-9 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது
dspgrc@tn.gov.in என்ற email முகவரியில் மே 4 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
விண்ணப்பத்தில்
சங்கத்தின் பெயர், வழக்கு தொடர்ந்த மனுதாரர், அங்கீகரிக்கப்பட்ட தனிநபர்
பெயர், பதவி, முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால் மட்டும்)
ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
தனிநபர்
விசாரணை அழைப்பு குறித்த நாள் மற்றும் நேரம் தொடர்பாக சங்கத்தினருக்கும்,
அரசின் இணையதளத்திலும் www.tn.gov.in மற்றும் கடிதம் வாயிலாகவும்
தெரிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.