தமிழக
சட்டப்பேரவையில் இன்று நடந்த பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை மீதான
விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, 900 முதுகலை ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள் என்றும் சிவபதி தெரிவித்தார். 22 ஆயிரத்து 400 மாணவ,
மாணவிகள் பயனடையும் வகையில் 320 பள்ளிகளில் ஒன்று மற்றும் 6-ம்
வகுப்புகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத 8 மாவட்டங்களில் மாணவ,
மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவர 140 லட்சம் செலவில் போக்குவரத்து வசதி
செய்து தரப்படும் என்றும், நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் சிவபதி
தெரிவித்தார். இதுபோன்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.