ஆசிரியர்களின்
செயல்ப்பாட்டினை முறையாக கண்காணிப்பதற்கு அவர்களுடைய வருகைப் பதிவினை
குறுஞ்செய்தி (SMS) மூலம் கண்காணிப்பதற்கு கணினி பயன்ப்பாட்டு
மென்பொருள் உருவாக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகள்
திறக்கும் நாளான 2012, ஜூன் 1 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும்
ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாதோரின் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம்
தலைமையாசிரியர் மையக்கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பி பதிவு செய்வார்.
அங்கிருந்து வருகைப் பதிவுசார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர்
அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது பள்ளி
ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்து ஒழுங்குப்படுத்த உதவும்