இந்திய நாடாளுமன்றத்தின்
மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பொது
பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயம்
கார்ப்பரேட் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
2 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றால் வரி இல்லை
ரூ2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி.
ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20% வரி.
ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வரி.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன :
ஊரகப் பகுதி வீட்டு வசதி திட்டம் மேம்படுத்தப்படும்
கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கு ரூ.50,00,000 லட்சம் கோடி முதலீடு
நேரடி மற்றும் மறைமுக வரிகள் சீரமைக்கப்படும்.
***
சுத்திகரிக்ப்பட்ட தங்கத்தின் சுங்கவரி இரட்டிப்பு.
வைரம், எமரால்ட், ரூபி விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது
தங்கம் மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி 2% ல் இருந்து 4% ஆக உயர்வு
பிராண்டட் வெள்ளி நகைகளுக்கு முழு சுங்க வரி விலக்கு
***
இறக்குமதி செய்யும் கார்களுக்கான சுங்க வரி 75% உயர்வு
தங்க கட்டி மற்றும் நாணயங்கள் இறக்குமதிக்கு சுங்க வரி 4% உயர்வு
எல்.சி.டி. எல்.இ.டி. ஆகியவற்றிற்கு சுங்க வரி விலக்கு
இறக்குமதி செய்யும் விமான உதிரி பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு
***
பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கும் நிதி ரூ.1,93,007 கோடியாக உயர்வு
செல்பேசி பாகங்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையில் இருந்து விலக்கு
ஆட்டோமேட்டட் ஷட்டல் லூம்ஸ்களுக்கும் சுங்கத் தீர்வையில் இருந்து விலக்கு
ரயில்வே கருவிகளுக்கான சுங்கத் தீர்வை 10%ல் இருந்து 7.5% ஆக குறைப்பு
தங்கம் மற்றும் பிளாட்டினம் பொருட்களுக்கான சுங்கத் தீர்வை உயர்வை
***
சேவை வரி உயர்வு மூலம் ரூ.18,660 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு
சுங்கவரி தீர்வையில் மாற்றமில்லை
விலை உயர்ந்த கார்களுக்கான சுங்கத் தீர்வை 27% ஆக உயர்வு
சில முக்கிய கட்டமைப்புப் பணிகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு
எல்.என்.ஜி. சுங்கத் தீர்வையில் இருந்து விலக்கு
தெர்மல் மின் நிலையங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு சுங்க வரி விலக்கு
நிலக்கரிக்கு முழு சுங்க வரி விலக்கு
***
பள்ளிக் கல்விக்கு சேவை வரியில் இருந்து விலக்கு
ஆராய்ச்சி பணிகளுக்கு 200% வரி விலக்கு
17 சேவைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளுக்கும் சேவை வரி விலக்கு
எக்ஸைஸ் டியூட்டி 10%ல் இருந்து 12% ஆக உயரும்
சேவை வரியும் 10%ல் இருந்து 12% ஆக உயர்வு
***
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயம்
கார்ப்பரேட் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
2 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றால் வரி இல்லை
ரூ2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி.
ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20% வரி.
ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வரி.
***
2012-13ம் நிதியாண்டின் மொத்த செலவுத் தொகை ரூ.14.9 லட்சம் கோடி
வரும் நிதியாண்டில் மொத்த வரி வருவாய் 15% உயரும்.
பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தி அமையும்.
திட்டமிடப்படாத செலவுத் தொகை ரூ.9.7 லட்சம் கோடி
வரி வருவாய் ரூ.10.77 லட்சம் கோடி
இந்தியாவின் மொத்த வருவாயில் சராசரி வரித் தொகை 10.6%
அயல்நாட்டு அனல்மின் நிலையங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள கோல் இந்தியா ஆலோசனை அளித்துள்ளது.
***
மானியத் தொகை சுமையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தினை செயல்படுத்த ரூ.25,555 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டித் தொகை குறைப்பு.
சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.1.95 லட்சம் கோடி ஒதுக்கீடு
***
ஊரகப் பகுதி மேம்பாட்டிற்காக ரூ, 20,000 கோடி ஒதுக்கீடு
என்ஆர்எச்எம். திட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.20,820 கோடியாக உயர்வு
இந்தியாவின் வளர்ச்சி திருப்தியளிக்கவில்லை. ஆனால் தற்போது சற்று உயர்ந்து வருகிறது.
வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும்.
***
கட்டமைப்புப் பணிகளுக்கான வரியற்ற நிதியாக ரூ.60,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கார்ப்பரேட் கடன் சந்தையில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படும்.
சம அதிகாரம் கொண்ட சேமிப்பு திட்டங்கள் அறிமுகம்.
ஊரகப் பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக ரூ.14,000 கோடி ஒதுக்கீடு.
சொத்துக்ள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வருமானம் ஈட்ட இலக்கு
***
வரும் நிதியாண்டில் 8,800 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.20,208 கோடி முதலீடு செய்யப்படும்.
விவசாயமும், அணைகளும் சிறப்பு நிதி பெற தகுதிவாய்ந்தவையாக உள்ளன.
மாநில அளவிலான விவசாய உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
உணவு பாதுகாப்புக் கொள்ளை உருவாக்கப்படும்.
நபார்ட் வங்கிக்கு 10,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
குறைந்த கால பயிர்க் கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் வேளாண் கடன்களுக்கு 5.75 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***
12வது திட்டத்தில் கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
இரட்டை கட்டமைப்பு கடன் தொகை ரூ.60,000 கோடி
டி.டீ.சி. முறை விரைவில் அமல்படுத்தப்படும்.
வரும் 5 ஆண்டுகளுக்குள், இந்தியாவிற்குத் தேவையான யூரியாவை இந்தியாவே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***
ராஜீவ்காந்தி இக்விடி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவின் கட்டமைப்புத் துறைகளில் உள்ள பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும்.
தற்போதுள்ள பணவீக்கமும், பற்றாக்குறையும் வரும் நிதியாண்டில் களையப்படும்.
ஊழலையும்,
கறுப்புப் பணத்தையும் ஒழிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள், முடிவுகள்
அனைத்தும் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் நடத்தப்படும்.
***
வரும் நிதியாண்டில் ரூ.30,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. முறை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்தப்படும்
நேரடி வரி விதிப்பு முறை விரைவில் அமல்படுத்தப்படும்.
மானியத் தொகைகள் திருத்தியமைக்கப்படும்.
தனியாரின் முதலீடு ஊக்குவிக்கப்படும்.
வேளாண்மை, எரிசக்தி, போக்குவரத்து, நிலக்கரி, சக்தி, தேசிய நெடுஞ்சாலைத் துறைகளில் உள்ள தடைகள் நீக்கப்படும்.
***
உற்பத்தி துறை மீண்டெழுந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது.
கருப்புப் பணமும், ஊழலும் அதிகரித்துள்ளன
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது.
எண்ணெய் விலை உயர்வு, வளர்ச்சியை மிகவும் பாதித்துள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி சந்தையில் இந்தியா இலக்கினை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு சவால்களை சந்தித்து அதில் இருந்து மீண்டெழுந்து வந்துள்ளோம்.
நாட்டின் மொத்த வருவாய் உயர்வு 6.9% அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாட்டின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை.
மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார நிலைமை கவலை கொள்ள வைத்தன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்தது.
பொருளாதாரத்தில் சேவை வழங்கல் பிரிவில் மேம்பாடு தேவைப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டன.