முதல்வர்
ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறையின் கல்வி
தகவல் சார்ந்த மேலாண்மை முறைமையினை தொடங்கி வைத்தார். இம்முறைமையில்
பொதுவான இணையதளம், கல்வி பாடப்பொருள் வழங்கும் இணையதளம், குறுஞ்செய்தி
மூலம் ஆசிரியர் வருகைப் பதிவு இணையதளம் மற்றும் துறையிடை தகவல் பரிமாற்றம்
முறைமை ஆகியவற்றை உள்ளடக்கி அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக தொடங்கப்படும் பொதுவான இணையதளத்தில்
பள்ளிகளில்
பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத
பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள்
போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும்.
பள்ளிகளில்
பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, இடை நிற்றல், தேர்வுகள், தேர்ச்சி
போன்றவைகள் பதிவு செய்யப்படும். இதில் பயிலும் மாணவ, மாணவியர்
ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு, ஆண்டு தோறும் அந்த மாணவ,
மாணவியரின் நிலை கண்காணிக்கப்படும்.
முதல்
கட்டமாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
திருச்செந்துரை, அயிலாப்பேட்டை, எட்டரை, சோமரசம் பேட்டை மற்றும்
இனாம்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு
இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே
போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் விவரங்கள், உதவி பெறும்
பள்ளிகளின் விவரங்கள் மற்றும் சுயநிதி பள்ளிகளின் விவரங்கள் இந்த
இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment