welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday, 26 May 2015

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஜூன் 1–ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என கருதப்பட்டது.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன் வைத்து பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டப்படி ஜூன் 1–ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் தற்போது பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஜூன் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.

அதுபோல் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன எனவும் ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழக கல்வித் துறையின் உயர்நிலை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.
ஊடகங்களும், பெற்றோர்கள் சிலரும் இத்தகைய கருத்தைத் தெரிவித்தால்கூட பரவாயில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளையும், அதில் பணிபுரிந்து வருகிற ஆசிரியர்கள் குறித்தும் உண்மையான நிலையை உணர்ந்திருக்கும் கல்வித் துறை உயர் அதிகாரிகளே இப்படிக் கூறினால், உண்மையான அக்கறையுடன் உழைத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளில், உழைப்பில் பாதிப்பு வராதா?
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் (அனைத்து வகையான நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள்) முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்கூட பெற்றோர்களின் கல்வியறிவுதான் மிக முக்கியமான விஷயமாக அத்தகைய கல்வி நிறுவனங்களால் விசாரிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வியறிவு மட்டுமே உள்ளவரானால் அவர்களது குழந்தைகளின் சேர்க்கை என்பது குதிரைக் கொம்பாக மாறி விடுகிறது.
பெற்றோர்கள் படித்திருந்தால் மட்டுமே வீட்டில் பாடங்களை சொல்லித்தர முடியும் என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் கூறும் அறிவுரை.
அப்படி என்றால், பள்ளிக்கு செல்வது எதற்காக என்பது புரியவில்லை. மேலும், பெற்றோர்கள் படித்திருந்தாலும்கூட சம்பந்தப்பட்ட குழந்தையும் அதற்குரிய தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அந்தத் தனியார் பள்ளியில் சேர முடியும்.
ஆனால், அரசுப் பள்ளியில் இது போன்ற அறிவைச் சோதிக்கும் தேர்வோ, பெற்றோர்களின் கல்வி அறிவை விசாரிக்கும் நிலையோ கிடையாது. எந்தவொரு மாணவ - மாணவியையும் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்புகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் இன்றளவும் உள்ளது.
இப்படி தொடக்கப் பள்ளிகளில் தொடங்கும் மாணவன் தனது கல்வியை எவ்விதப் பிரச்னையும் இன்றி படித்து அரசு பொதுத் தேர்வுக்குள் நுழையும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு வரை தங்கு தடையின்றி தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியரால் 10-ஆம் வகுப்புத் தேர்வையும் சாதாரணமான தேர்வாக எதிர்கொள்ளத் தோன்றுவதுதான் பிரச்னை.
9-ஆம் வகுப்பு வரை தடையின்றித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தேர்வு உளவியல்ரீதியான பயத்தை உருவாக்கி அவர்களின் தேர்ச்சியையும் பாதிக்கிறது.
ஆனால், சில தனியார் பள்ளிகளில் சரியாகப் படிக்காத மாணவரை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையுள்ளது. மேலும், சில பள்ளிகள் சரியாகப் படிக்காத மாணவரை 9-ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிடுவதும் அல்லது தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்த்து தனித் தேர்வராகத் தேர்வு எழுதச் செய்வதும் நடந்து வருகிறது.
இதை எல்லாம் தாண்டி தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொருவரும் 10-ஆம் வகுப்புப் பாடத்தை 2 வருடங்கள் இடைவிடாது விடுதியில் தங்கிப் படிக்கும் நிலையும் உள்ளது.
மேலும், ஒவ்வொரு பாடத்துக்கும் அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சிகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து வருகின்றன. இதற்கெல்லாம் எவ்வளவு லகரங்களை மாணவர்களின் பெற்றோர்கள் செலவிட்டிருப்பார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் அதற்குரிய பாடத்தைத்தான் மாணவன் படிக்க வேண்டும். இதை எல்லாம்விட பெரிய வருத்தமான விஷயம் என்னவென்றால், தேர்வு தொடர்பான விவரங்களைத் தெரிவிக்கப் பெற்றோர்களை அழைத்தால்கூட பெரும்பாலான பெற்றோர்கள் வருவதே இல்லை என்பதுதான்.
ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வலியச் சென்று தங்களின் குழந்தைகள் குறித்து விசாரிக்கும் நிலையுள்ளது.
ஒழுக்கம், மதிப்பெண் குறைவு என மாணவர்களைக் கண்டிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடுகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதுபோல, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பிளஸ் 1-இல் இடம் வழங்குகின்றன தனியார் பள்ளிகள். ஆனால், அரசுப் பள்ளிகளில் பல முறை தேர்ச்சி பெறாத மாணவர்களையும்கூட முதல் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் மெதுவாகப் பயிலும் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை யாருக்கும் (குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள்) குறைவாகாது.
தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பள்ளிகளில் பணிக்குச் சென்றுள்ள ஆசிரியர்களின் (தனியார் பள்ளிகளில் அப்படி இல்லை) கைகளை சுதந்திரமாக கல்வித் துறை அவிழ்த்து விட்டால் போதும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விண்ணையும் தாண்டி விரியும் என்பது திண்ணம்.

ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

          அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

           அரசு பள்ளி ஆய்வக உதவியா ளர் (லேப் அசிஸ்டென்ட்) பணிக் கான தேர்வு மே 31-ம் தேதி நடை பெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்திலிருந்து (www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். இந்த இணையதளத்தில் “Lab Assistant Screen Test Exam Hall Ticket Download” என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் திரையில் தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு டவுன் லோடு என்பதை க்ளிக் செய்தால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதி விறக்கம் ஆகும். அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார். ஆய்வக உதவியாளர் பணியில் 4,362 காலியிடங்களுக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Monday, 3 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.