welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Showing posts with label TNTET. Show all posts
Showing posts with label TNTET. Show all posts

Tuesday, 26 May 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

          அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

           அரசு பள்ளி ஆய்வக உதவியா ளர் (லேப் அசிஸ்டென்ட்) பணிக் கான தேர்வு மே 31-ம் தேதி நடை பெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்திலிருந்து (www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். இந்த இணையதளத்தில் “Lab Assistant Screen Test Exam Hall Ticket Download” என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் திரையில் தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு டவுன் லோடு என்பதை க்ளிக் செய்தால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதி விறக்கம் ஆகும். அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார். ஆய்வக உதவியாளர் பணியில் 4,362 காலியிடங்களுக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Monday, 3 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

Sunday, 5 January 2014

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு சுறுசுறுப்பு

லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.

பணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே, அதற்கு முன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கு:ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன.

ஜனவரிக்குள் 15 ஆசிரியர்கள் நியமனம்:பிப்ரவரிக்கு முன் அனைத்தும் முடிக்கப்படும்.




Saturday, 28 December 2013

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்


உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர்.

இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Monday, 23 December 2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியீடு.



முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியிடப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.நீதிமன்ற வழக்கால்
முதுநிலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்.7இல் வெளியிடப்பட்டன.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 21இல் நடைபெற்றது.

CERTIFICATE VERIFICATION DATES: 30.12.2013 and 31.12.2013

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்காக ஜூலை 21இல் டி.ஆர்.பி.ஆல் தேர்வு நடத்தப்பட்டது.  இந்தத்தேர்விற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 748.

தமிழ் தவிர இதர பாடங்களுக்கான முடிவுகள் 07 அக்டோபர் 2013 அன்று வெளியானது. இன்று (23.12.2013)தமிழ் பாடத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி.இன் http://trb.tn.nic.in இணையதளத்தில் காணலாம்.

மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்படாது எனவும், இணையதளத்தில் உள்ள தகவல்களை பார்த்து, அதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம், என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்க்கும் மையங்கள்

சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் மையங்களில் நடைபெறும்.

Sunday, 22 December 2013

இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது.
இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய )  புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.

இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.
 இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது: 
பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்
ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.

கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது. 
ஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை.
.
ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால் தேர்வர்களும், முடிந்த வரை போராடுகின்றனர். ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி இன்று வரை முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், சில கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ் பாடத்தின் தேர்வு முடிவை வெளியிட கோர்ட் தடை விதித்தது. 
இந்த வழக்கில் கடந்த வாரம், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட கோர்ட் உத்தரவிட்ட நிலையில், புதிதாக இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது. 
இதற்கிடையே ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தோல்வி அடைந்தனர். "சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது: 
பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள் நடந்து விடுகின்றன. தவறான விடை, கேள்வி என தெரிந்தால், அதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும் "உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர் கூறுகின்றனர்.
எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு 2,000 ரூபாய் என ஐந்து பேர் சேர்ந்து, ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும், பலரும் வழக்கு தொடர்ந்ததால் வழக்குகளின் எண்ணிக்கை, மலை போல் குவிந்துள்ளது. 
"அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராத அளவிற்கு, தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, 3 October 2013

9 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை, சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.

அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி......புதிய தலைமுறை....

Monday, 19 August 2013

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம் ? என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘ கீ ஆன்சர் ’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது , ‘‘ தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் , அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ’’ என்று தெரிவித்தனர்.

TNTET AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.


  1. TNTET PAPER I AUGUST 2013 - TENTATIVE ANSWER KEY BY ARIVUKKADAL(NEW) 

  2. TNTET PAPER I AUGUST 2013 - TENTATIVE ANSWER KEY BY VIDIYAL(NEW) 

  3. TNTET PAPER I AUGUST 2013 - TENTATIVE ANSWER KEY BY SUCCESS ACADEMY(NEW)

TET PAPER II - 18.8.2013 - Nr ias academy key


TET PAPER II - 18.8.2013

TET - PAPER II - PSYCHOLOGY
TET - PAPER II - ENGLISH
TET - PAPER II - TAMIL
TET - PAPER II - MATHS AND SCIENCE
TET - PAPER II - SOCIAL

TRB – TET – PAPER II – Social Science / Maths / Science Tentative Answer Keys


Sunday, 3 February 2013

ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.கட்டாய கல்விச் சட்டத்தின் படி,

எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை, 12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.

ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில், இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.

புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 29 January 2013

பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

அடிப்படை உரிமை

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

Sunday, 25 November 2012

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி

  அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.
  ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
  கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.