முடியும் என்றால் முயற்சி செய் ! முடியாது என்றால் பயிற்சி செய்!! தொடர்புக்கு:9003798003
popup.
Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts
Tuesday, 26 May 2015
Tuesday, 5 February 2013
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பில், 8,000 இடங்கள் குறைந்தன: அரசுத் துறைகள் அலட்சியம்
டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105 காலி பணியிடங்களுக்கு, இந்த
ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும், 8,000
பணியிடங்கள் குறைந்துள்ளன. காலியிடங்களை நிரப்புவதில், அரசு அதிகாரிகள்
அக்கறை காட்டாததால், அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம், இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுகள் குறித்த அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், 27 துறைகளில் உள்ள, 35 பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, மொத்தம், 10 ஆயிரத்து, 105 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம், 18 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், 8 ஆயிரம் பணியிடங்கள் குறைந்துள்ளன. 2 லட்சம் காலியிடங்கள் தமிழக அரசுத் துறைகளில் மொத்தம், 12 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், சுமார், 2 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து, ஒவ்வொரு துறையிலும் பட்டியல் கேட்கப்பட்டது. சில துறைகளின் அதிகாரிகள் மட்டுமே கொடுத்தனர். காலியிடங்கள் பட்டியல் கொடுக்காமல், பல துறைகளில் தொடர்ந்து காலதாமதம் செய்தனர். அவர்களுக்கு, போன் மூலமாகவும், நேரிலும் சென்று பல முறை வலியுறுத்தியே, பட்டியலை பெற்றோம். 24 ஆயிரம் காலி பணியிடங்கள் பட்டியல் கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், குறைந்த அளவு, காலிப்பணியிட பட்டியல் மட்டுமே கிடைத்தது. எனினும், பல்வேறு அரசுத் துறைகளில் இருந்து, தொடர்ந்து காலியிட விவரங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். அந்த இடங்களுக்கான தேர்வு அட்டவணை, தனியாக வெளியிடப்படும் என்றும், தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்திருக்கிறார். எனவே, கடந்த ஆண்டு அளவிற்கு, மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை உயரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அரசுக்கு அக்கறை இல்லாதது ஏன்?
அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருந்தாலும், அவற்றை நிரப்புவதில், தமிழக அரசு ஆர்வம் காட்டுவது இல்லை. பல துறைகளில், ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. உதாரணமாக, கருவூலத் துறையில், ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கு சம்பளம், படிகள் என, ஏராளமான சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது. இது, அரசின் செலவினத்தை அதிகப்படுத்துகிறது. உலக வங்கியும், மத்திய அரசும், செலவினங்களை குறைத்தால் மட்டுமே மானியம் வழங்குவோம் என்று மாநில அரசுகளை நிர்பந்திக்கின்றன. இதன் பிரதிபலிப்பு தான், அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் லட்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 31 January 2013
10000 பேருக்கு வேலை
சென்னை: தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று
வெளியிட்டது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள
பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு
நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு அரசு துறைகளுக்கு, 18 ஆயிரத்து,
244 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்தது.இந்த ஆண்டு, 27 அரசு
துறைகளில், 35 பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105
இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது.இதற்கான
தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியதாவது:
மருத்துவத் துறையில், உதவி அறுவை மருத்துவர் - 2,800; கால்நடை உதவி அறுவை
மருத்துவர் - 921; இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 2,716; வி.ஏ.ஓ., -
1,500 உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள்
நடத்தப்பட உள்ளன.இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது. இத்தேர்வுகளுக்கான காலஅட்டவணை, தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முறையில், 10 ஆண்டுகளுக்கு பின், சில
மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனி, குரூப் - 1 உள்ளிட்ட அனைத்து பிரிவு
தேர்வுகளிலும், 50 மதிப்பெண்களுக்கு, திறனறி கேள்விகள் (Aptitude)
கேட்கப்படும்.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான
தேர்வுகளில், பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப் - 2 பிரிவில்,
நேர்முகம் மற்றும் நேர்முகம் அல்லாத பணியிடங்களுக்கு, தனித்தனியாக தேர்வு
நடத்தப்படும்.குரூப் -1 தேர்வு, "மாநில குடிமை பணிகள் தேர்வு' என, பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குரூப் - 2 பிரிவில் உள்ள, நகராட்சிஆணையர்,
உதவி வணிக வரி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, சார் பதிவாளர்,
இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள், குரூப் - 1 பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, குரூப் - 2...1ம் தேதி வெளியிடப்படும். 2007ம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக,
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள்,
உரியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்
Wednesday, 30 January 2013
Tuesday, 29 January 2013
.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை 30ம் தேதி வெளியிடப்படும்
சென்னை: 2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை
மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்
குறித்த விபரங்கள், இம்மாதம் 30ம் தேதி வெளியிடப்படும் என தேர்வாணையத்
தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
வருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ
பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது.
இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம்
கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது.
அப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர்
வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம்
24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.
குரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
குரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும்.
எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும், அவற்றில் எத்தனை ஆயிரம் பேர், அரசுப்
பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற விபரங்கள் அப்போது வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு, 30 ஆயிரம் பேர் வரை, அரசுப் பணிகளுக்குத் தேர்வு
செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குரூப் 4 பணியிடங்களை
கணிசமாக எதிர்பார்க்கலாம்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை 30ல் வெளியீடு

Wednesday, 28 November 2012
வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு
முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர்தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய, 2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில், ஆதி திராவிடர்களுக்கான, 1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள் தேர்வுஎழுதினோம். 2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது.
பின்னடைவு பணியிடங்களில், 270 பேர் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டனர். பணியில் சேராதவர்கள், பணியிலிருந்துவிலகியவர்கள், வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும்,காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக, அரசு தெரிவித்தது.மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க, 2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட, காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.குரூப் 2 தேர்வில், ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால்,காலிப் பணியிடங்கள் ஏற்படும். முதலில், வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியிட்டால், எங்களது உரிமை,பணிவாய்ப்பு பாதிக்கப்படும்.
Sunday, 25 November 2012
10 லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு
பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில்
வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளில் உள்ள
3,220 காலி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை
ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில்
கலந்துகொள்ள 4,838 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதல் நாள்
கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் துறை ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். இந்த கவுன்சிலிங் டிசம்பர் 1–ந் தேதி வரை வேலை நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக கவுன்சிலிங் பணிகளை பார்வையிட்ட நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 1,870 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். அதேபோல், கடந்த 4–ந்தேதி நடந்து முடிந்த குரூப்–2 தேர்வு முடிவை அடுத்த மாதம் (டிசம்பர்) 2–வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
ஜனவரியில் தேர்வு அட்டவணை
ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் வெளியிடப்படும்? என்று முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடும் முறையை டி.என்.பி.எஸ்.சி. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தியது. அதன்படி போட்டித்தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக துறை வாரியாக காலி இட விவரங்களை கேட்டுப்பெற்று வருகிறோம். தேர்வு அட்டவணையை ஜனவரி மாதத்தில் வெளியிட்டு விடுவோம்’’ என்றார்.
குருப்–1 பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு டிசம்பர் மாதம் 30–ந்தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. ஆனால், அதே தேதியில் யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. மாற்றியமைப்பது வழக்கம். இதுகுறித்து நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘ குரூப்–1 முதல்நிலைத்தேர்வு தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிப்போம்’’ என்று கூறினார்.

2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் 24 ஆயிரம் பேர் பணி நியமனம்: TNPSC
"இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்", என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.
சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை
தற்போதைய முன்னேற்றம்" குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா
ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது:
மனித வளத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஆனால், நிறுவனங்களில் உள்ள மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின்
குறைகளை மட்டும் கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை
பார்ப்பவர்களோடு சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து
துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக திறமையுடன் செயல்படுவர்களாக
இருக்கும் பட்சத்தில், வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து
செயல்படுவர்.
செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், இம்மாதம்
இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ.,
4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், வரும் டிச.,
15க்குள் வெளியிடப்படும்.
அரசு பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக, ஓராண்டுக்குள்,
24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை
குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தரும்
பட்சத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு,
நட்ராஜ் பேசினார்.
Friday, 5 October 2012
குரூப் - 4 தேர்வு முடிவு வெளியிட நீங்கியது தடை
குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை,
சென்னை ஐகோர்ட் நீக்கியது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, ஜூலை 7ம்
தேதி நடந்தது. 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 10.2
லட்சம் பேர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தேர்வு எழுதிய சிலருக்கு,
200 கேள்விகளுக்குப் பதில், 150 கேள்விகள் மட்டுமே, கேள்வித் தாளில் இடம்
பெற்றிருந்தன.
இதையடுத்து, ஐகோர்ட்டில், சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "மறு உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவை வெளியிடக் கூடாது' என, உத்தரவிட்டது. விடைத்தாளை திருத்திக் கொள்ள, அனுமதித்தது. ஆகஸ்ட் 17ம் தேதி, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறைமதி, "குறைபாடு உடைய, கேள்வித்தாளை வழங்கியதால், பாதிக்கப்பட்ட, 13 பேருக்கு, புதிதாக தேர்வு நடத்தப்பட்டது. அதில், மனுதாரர்களுக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டது' என்றார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு, "தேர்வு நடத்தப்பட்டு விட்டதால், எங்களுக்கு மேற்கொண்டு எந்தப் பிரச்னையும் இல்லை' என்றார். இதையடுத்து, "குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிடக் கூடாது' என, ஆகஸ்ட் மாதம் பிறப்பித்திருந்த உத்தரவை நீக்கி, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, 21 September 2012
Friday, 14 September 2012
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை "ஆன்-லைன்' வழி நடத்த திட்டம்
""டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்' மூலம் நடத்த
திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்பட
உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.
இதுகுறித்து, நடராஜ் கூறியதாவது:
ராஜஸ்தானில், அனைத்துப் போட்டித் தேர்வுகளும், "ஆன்-லைன்' மூலம் தான் நடத்தப் படுகின்றன. சில மாநிலங்களில், "ஆன்-லைன்' தேர்வு முறையும், கேள்வித்தாள் முறையும் உள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட, சில வகை தேர்வுகளை மட்டுமே, "ஆன்-லைன்' மூலம் நடத்துகிறது. பெரும்பாலான தேர்வுகளை, கேள்வித்தாள் முறையில் தான் நடத்துகிறது. இந்த முறையில் தேர்வு நடத்துவதற்கு, அடிப்படையில் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதைச் செய்து, அனைத்து தேர்வுகளையும், "ஆன்-லைன்' மூலம் நடத்தும் திட்டம் உள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' விடப் போகிறோம். தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்து, அந்நிறுவனம் மூலம், "ஆன்-லைன்' தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில், அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்குள்ள கணினிகளை பயன்படுத்தி, தேர்வு நடத்தலாம். விடுமுறை நாளில் தான், தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், பொறியியல் கல்லூரிகளின் கணினிகளை பயன்படுத்துவதில் பிரச்னை இருக்காது. இதன்மூலம், கல்லூரி நிர்வாகங்களுக்கு, தனி வருவாயும் கிடைக்கும். தேர்வு நடக்கும் நாளில், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு தேர்வர் சென்று, கணினி முன் அமர்ந்தால், சரியான நேரத்தில், விடைத்தாள் வெளிப்படும். கணினியிலேயே விடைகளை, "டிக்' செய்தால் போதும். தேர்வு முடிந்ததும், மிக விரைவாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இதற்கான அனைத்து மென்பொருளும், முன்கூட்டியே செய்யப்படும். "ஆன்-லைன்' மூலம் தேர்வை எதிர்கொள்வதில், யாருக்கும் பிரச்னை இருக்காது. எனவே, இத்திட்டத்தை நிறைவேற்றுவதில், முனைப்பாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு நடராஜ் கூறினார்.
புதிய முறையில் குரூப் - 2 கேள்வித்தாள்:
ஆக., 12ம் தேதி நடந்த, குரூப்-2 தேர்வின் கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவ., 4ம் தேதி, மறுதேர்வு நடக்க உள்ளது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை, எப்படி பாதுகாப்பது என்பது குறித்து, தேர்வாணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன் சோதனை முயற்சியாக, சமீபத்தில் நடந்த நூலகர் பணிக்கான தேர்வில், புதிய திட்டத்தை, தேர்வாணையம் அமல்படுத்தியது. தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரம் முன், "ஆன்-லைனில்' கேள்வித்தாளை வெளியிட்டு, தேர்வு மையங்களில் உள்ள கணினியில், ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து, கேள்வித்தாள்கள் "பிரின்ட்' எடுத்து வழங்கப்பட்டன. இதே முறையை, குரூப்-2 தேர்வுக்கும் பயன்படுத்துவது குறித்து, தேர்வாணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, தேர்வாணையம் விரைவில் முடிவு எடுக்கும்.
- நமது நிருபர் -
Sunday, 29 July 2012
Tuesday, 10 July 2012
TNPSC VAO & Group 2
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Sunday, 8 July 2012
TNPSC------ Group-4 Tentative Answer Keys
|
Sl.No.
|
Post & Subject Name
|
|
(Posts included in Group-IV Services)
(Date of Examination:07.07.2012 FN)
|
|
|
1
|
|
|
2
|
|
|
3
|
|
|
Note: Right
Answer has been tick marked in the respective choices for each question.
Representations if any shall be sent so as to reach the Commission's Office
within 7 days. Representations received after 14th July 2012 will receive no
attention.
|
|
Sunday, 24 June 2012
40 நாட்களில் குரூப்- 4 தேர்வு முடிவு: நடராஜ் தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,), குரூப்- 4 தேர்வுகள், ஜூலை 7ம் தேதி நடக்கின்றன. மண்டல அளவிலான தேர்வு ஏற்பாடுகள் குறித்து, ஆணைய தலைவர் நடராஜ், கோவையில் நேற்று, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், செய்தியார்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், மொத்தம் 244 இடங்களில், 5,000 மையங்களில், குரூப்- 4 தேர்வுகள் நடக்கின்றன. 10 ஆயிரத்து 793 பணியிடங்களுக்கு, 12 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மாநிலத்தில், அதிகளவில் சேலம் மாவட்டத்தில், 1,013 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக, மையங்களின் கீழ் தளங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தேர்வு மையங்களில், வினாத்தாள் வினியோகம் முதற்கொண்டு, அனைத்து நடவடிக்கைகளும், வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்வு எழுதிய 40 நாட்களுக்குள், முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கவுன்சிலிங் மூலம், 15 நாட்களுக்குள் பணி நியமனம் அளிக்கப்படும். கவுன்சிலிங் நடவடிக்கைகள் தொடர்பாக, அண்ணா பல்கலையின் உதவி கோரப்பட்டுள்ளது. அடுத்த தேர்வு நடந்து, முடிவு அறிவிக்கும் வரை, காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்படும்.
குரூப்- 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 3,663 பணியிடங்களுக்கு, ஒரு நாளைக்கு, 5,000 விண்ணப்பங்கள், இணையம் வாயிலாக வருகின்றன. மொத்தம், ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு அடுத்தபடியாக, 1,300 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், 15 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள், முக்கிய தேர்வுகள் நடக்க உள்ளன என்று நடராஜ் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட பணியிடங்களுக்கு, ஓராண்டிற்கு, ஒரு தேர்வு என்ற நடைமுறை கிடையாது. தேவைப்பட்டால், கூடுதல் தேர்வுகள் நடத்தப்படும். காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியல் தரப்பட்டால், அதற்கு ஏற்றவாறு, தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படும்.
குரூப்- 4 தேர்வுக்கு, முதலில், 3,000 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. நாங்கள் முயற்சி எடுத்து, அனைத்து அரசு துறைகளிடமும் பட்டியல் பெற்று, தற்போது, 10 ஆயிரத்து 793 பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்துகிறோம். குரூப்- 2 தேர்விலும், முதலில் 1,615 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது, 3,663 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நான் பொறுப்பேற்ற பின், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 6,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று நடராஜ் கூறினார்.
Saturday, 23 June 2012
பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
அரசு கடித எண். 20418 / ஈ 1 / 2012 - 1, நாள். 15.06.2012
ஜூலை 7 ந் தேதி நடைபெற உள்ள TNPSC தேர்வுகளான குரூப் 4 மற்றும் குரூப் 8
தேர்வுகள் அன்றைய தினம் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவதை
முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து பள்ளிகள் மற்றும்
கல்லூரிகள் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதாலும், தேர்வு மைய
கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாலும் மற்றும் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வு ஆணைய செயலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அன்றைய தினம்
தேர்வுகள் சிறப்பாக நடைபெற விடுமுறை அளிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)